Aishwarya Rajesh - அப்படி செஞ்சா வாழ்க்கை நாசமா போயிடும்.. இயக்குநர் குற்றச்சாட்டுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பதில்
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக புலிமாடா திரைப்படம் வெளியானது. அடுத்ததாக கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இரண்டு மலையாள படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் வீரபாண்டியன் பேசியது சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. தற்போது அதற்கு மறைமுகமாக விளக்கமளித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கோலிவுட்டில் இப்போது டாப் 10 ஹீரோயின்கள் லிஸ்ட்டில் இருக்கிறார். சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரைக்கு வந்த அவர் ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டவர். குடும்பமும் மிடில் கிளாஸ் குடும்பம்தான். ஒருவழியாக சினிமாவில் வாய்ப்பு பெற்று தன்னுடைய திறமையை நிரூபித்துவிட்டார். முக்கியமாக அவரது நடிப்பில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் அவரது கரியரில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது. ஏனெனில் வளர்ந்துவரும் சமயத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க எந்த நடிகையும் யோசிப்பார். ஆனால் ஐஸ்வர்யா அப்படி நினைக்கவில்லை.

வடசென்னை: காக்கா முட்டை திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தாலும் அவர் எதிர்பார்த்தபடி அடுத்தடுத்து வாய்ப்புகள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை. அது தனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்ததாக அவரே ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க சில படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் வடசென்னை படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா. அதில் போல்டாக கெட்ட வார்த்தை எல்லாம் பேசி நடித்திருந்தார்.
ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட்: தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாகவே கதாநாயகிகளை மையப்படுத்தி படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் அந்த ஜானருக்குள் சென்றிருக்கின்றனர். அவர்கள் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் இருக்கிறார். அவர் நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா உள்ளிட்ட படங்கள் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகவே அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படங்கள் போதுமான வரவேற்பை பெறவிட்டாலும் ஐஸ்வர்யாவின் கதை தேர்வு பலரையும் ரசிக்க வைத்தது.
அடுத்தடுத்த படங்கள்: தமிழில் மட்டும் நடித்துவந்த அவர் புலிமாடா படத்தின் மூலம் மலையாளத்தில் எண்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக தமிழில் அவர் கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் அஜயண்டே ரண்டம் மோஷனம், ஹெர் ஆகிய படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் இயக்குநர் வீரபாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து பேசியிருந்தது இணையத்தில் ட்ரெண்டானது.
என்ன பேசினார்: அவர் அந்தப் பேட்டியில்,"ஐஸ்வர்யா ராஜேஷை திரையுலகுக்கு நான் கொண்டு வந்தேன். என்னுடைய முதல் படமே ஐஸ்வர்யாவை வைத்துதான் எடுத்தேன். ஆனால் இந்த விஷயத்தை அவர் எந்தப் பேட்டியிலும் சொல்லவில்லை. இப்போது அவர் வளர்ந்துவிட்டார். அதனால் முதல் படம் இயக்கிய என்னுடன் அவர் மீண்டும் பணியாற்ற விரும்பவில்லை.
ஆட்டோவுக்கு பணம்: அவர் பணத்துக்காக சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவுக்குக்கூட நான் தான் பணம் கொடுத்தேன். அவர் நடிக்க வந்தபோது அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. அதனால் அவர் அப்செட் ஆனார். அப்போது அவரை சமாதானம் செய்து நடிக்க வைத்தேன். அந்த நன்றி எல்லாம் இப்போது ஐஸ்வர்யாவுக்கு இல்லை" என்று கூறியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் இதற்கு என்ன பதிலளிக்கப்போகிறார் என்று கேள்வி எழுப்ப தொடங்கினர்.
மறைமுக விளக்கம்: இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "நிறைய பேர் ஒரு பக்க கதையை மட்டுமே கேட்டுவிட்டு பேசுகிறார்கள். விஷயம் நடந்த இடத்தில் இல்லாமல்; என்ன நடந்தது என்பது தெரிந்துகொள்ளாமல் ஒருவரை ஜட்ஜ் செய்வது வாழ்க்கையையும், உறவையும் கெடுத்துவிடும். அதனால் மொத்த கதையையும் தெரிந்துகொண்ட பின்பு ஒருவரை நோக்கி குற்றச்சாட்டை வைக்க வேண்டும்; தாக்குதலை செய்ய வேண்டும்"என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மறைமுகமாக வீரபாண்டியனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











