அனைத்தையும் மாற்றிய லாக்டவுன்.. குழந்தை பருவத்துக்குச் சென்ற ஹீரோயின்.. காமிக்ஸ் படிக்கிறாராம்!

By

சென்னை: லாக்டவுன் காரணமாக குழந்தை பருவத்துக்குச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

Recommended Video

Ellu Vaya Pookalaye | Aishwarya Dutta Fantastic Try | Lock down Challenge

தமிழில், அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, நம்ம வீட்டுப் பிள்ளை உட்பட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி (கனா ரீமேக்), மிஸ் மேட்ச், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படங்களில் நடித்தார்.

கொரோனா

கொரோனா

அடுத்து, டக் ஜகதிஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காரணமாக இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. உயிர்க்கொள்ளி வைரஸான கொரோனா, உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அங்கு அங்கு 8 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அடுத்த இடங்களில் ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் நாடுகள் இருக்கின்றன.

உலகம் முழுவதும்

உலகம் முழுவதும்

இந்த வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதை கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தொற்று நோய் காரணமாக, உலகம் முழுவதும் 26 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்து இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது.

படப்பிடிப்பு ரத்து

படப்பிடிப்பு ரத்து

இதனால் மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர், நடிகைகளும் வீடுகளுக்குள் இருக்கின்றனர். உடற்பயிற்சி, சமையல் உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டு தங்கள் நேரங்களை கழித்துவருகின்றனர். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிடுகின்றனர்.

காமிக்ஸ் படிக்கிறேன்

காமிக்ஸ் படிக்கிறேன்

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த லாக்டவின் என்ன செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 'ஆன்லைனில் படங்கள் பார்க்கிறேன். லுடோ போன்ற கேம் விளையாடுகிறேன். சில நேரம் காமிக்ஸ் புக் படிக்கிறேன். இப்போது காமிக்ஸ் படிப்பது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மீண்டும் குழந்தை பருவத்துக்கு சென்றது போல அத்தனை மகிழ்ச்சி, அத்தனை உற்சாகம்' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X