ஃபுல் ஃபார்மில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடுத்த படம் என்ன தெரியுமா?

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக புலிமாடா திரைப்படம் வெளியானது. அடுத்ததாக கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இரண்டு மலையாள படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தமிழில் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்தை அறிமுக இயக்குநர் மனோபாரதி இயக்குகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கோலிவுட்டில் இப்போது டாப் 10 ஹீரோயின்கள் லிஸ்ட்டில் இருக்கிறார். சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரைக்கு வந்த அவர் ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டவர். குடும்பமும் மிடில் கிளாஸ் குடும்பம்தான். ஒருவழியாக சினிமாவில் வாய்ப்பு பெற்று தன்னுடைய திறமையை நிரூபித்துவிட்டார். முக்கியமாக அவரது நடிப்பில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் அவரது கரியரில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது. ஏனெனில் வளர்ந்துவரும் சமயத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க எந்த நடிகையும் யோசிப்பார். ஆனால் ஐஸ்வர்யா அப்படி நினைக்கவில்லை.

Aishwarya Rajesh New Movie Titled As Valaiyam Here are the full details

வடசென்னை: காக்கா முட்டை திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தாலும் அடவர் எதிர்பார்த்தபடி அடுத்தடுத்து வாய்ப்புகள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை. அது தனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்ததாக அவரே ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க சில படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் வடசென்னை படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா. அதில் போல்டாக கெட்ட வார்த்தை எல்லாம் பேசி நடித்திருந்தார்.

ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட்: தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாகவே கதாநாயகிகளை மையப்படுத்தி படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் அந்த ஜானருக்குள் சென்றிருக்கின்றனர். அவர்கள் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் இருக்கிறார். அவர் நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா உள்ளிட்ட படங்கள் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகவே அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படங்கள் போதுமான வரவேற்பை பெறவிட்டாலும் ஐஸ்வர்யாவின் கதை தேர்வு பலரையும் ரசிக்க வைத்தது.

அடுத்தடுத்த படங்கள்: தமிழில் மட்டும் நடித்துவந்த அவர் புலிமாடா படத்தின் மூலம் மலையாளத்தில் எண்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக தமிழில் அவர் கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் அஜயண்டே ரண்டம் மோஷனம், ஹெர் ஆகிய படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார்.

தமிழில் படம்: இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி மனோபாரதி என்ற அறிமுக இயக்குநர் வளையம் படத்தை இயக்குகிறார். ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட்டாக உருவாகும் இப்படம் திரில்லர் மற்றும் ஆக்‌ஷன் ஜானரில் வெளியாகிறது. ஓ மை கடவுளே, பேச்சுலர் போன்ற வெற்றி படங்களை தயாரித்த டில்லி பாபு இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறார். இதுதொடர்பான அறிவிப்பை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X