என்ன கிளாமர் லுக்கா.. அதுவே 10 கிலோ இருக்கும் போல.. பிரபல நடிகையை தாறுமாறாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல நடிகையின் புதிய போட்டோ ஷுட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை தாறுமாறாய் கலாய்த்து வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சினிமா பின்னணியை சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.

இதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷின் தாத்தாவும் தெலுங்கு திரைத்துறையில் பிரபலமானவர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்தள்ளார்.

சினிமா வாய்ப்பு

சினிமா வாய்ப்பு

ஐஸ்வர்யா ராஜேஷ் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே அறிமுகமானார். அந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்று வெற்றி பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அடுத்தடுத்து படங்கள்

அடுத்தடுத்து படங்கள்

2014 ஆம் ஆண்டு வெளியான நீதான் அவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்தார். இதனை தொடர்ந்து அவரது நடிப்பில் திருடன் போலீஸ், காக்கா முட்டை ஆகிய படங்கள் வெளியானது. காக்கா முட்டையில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

பாலிவுட்டிலும் என்ட்ரி

பாலிவுட்டிலும் என்ட்ரி

தொடர்ந்து ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுறேன், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ், கனா படத்தில் கிரிக்கெட் பிளேயராக நடித்து அசத்தியிருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், டாடி என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

கிளாமர் போட்டோ ஷுட்

கிளாமர் போட்டோ ஷுட்

கடைசியாக சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்ததால், தங்கை கேரக்டர் மட்டுமே கொடுத்து விடாதீர்கள் என தொலைக்காட்சியின் விருது நிகழ்ச்சி ஒன்றில் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் தான் கவர்ச்சிக்கு ரெடி, டூயட் பாடுவேன் என்பதை மறைமுகமாக சொல்லும் வகையில் கிளாமர் போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியிருக்கிறார்.

நோ இன்னர்ஸ்

அதில் ஆஷ் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். உள்ளாடை அணியாமல் இதுபோன்ற ஒரு போட்டோ ஷுட்டை நடத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதேபோல் ஒன்சைட் ஸ்லீவ்வுடன் ஒரு பக்க தொடை தெரியும்படியும் கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

என்ன கிளாமர் லுக்கா?

என்ன கிளாமர் லுக்கா?

இந்த போட்டோக்களை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன கிளாமர் லுக்கா? டிரெஸ் மட்டுமே 10 கிலோ இருக்கும் போலயே என்று கமென்ட் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் இன்டியன் பேபி டால் என்றும் நைஸ், க்யூட் என்றும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X