விஜய் பிரசாரத்துக்கு அழைத்தால்.. ஐஸ்வர்யா ராஜேஷின் முடிவு இதுதான்.. செம தெளிவா இருக்காங்க

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்திருக்கும் விஜய்; இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கவிருக்கிறார். அவர் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பதை பார்ப்பதற்கு அனைவருமே ஆவலோடு இருக்கிறார்கள். இந்நிலையில் அவரது அரசியல் பிரவேசம் குறித்தும்; பிரசாரத்துக்கு அழைத்தால் செல்வேனா என்பது குறித்தும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியிருக்கிறார்.

விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழ்நாடு அரசியல் களத்தை சூடாக்கியிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பல கட்சிகள் கூட்டணி அமைத்து; தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையையும் தொடங்கிவிட்டன. ஆனால் விஜய்யின் தவெகவுடன் இதுவரை ஒரு கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. இப்படி தனித்து விடப்பட்டிருக்கிறோமே என அவரது ரசிகர்களும் தொண்டர்களும் கொஞ்சம் அப்செட்டாகியே இருக்கிறார்கள்.

Aishwarya Rajesh Opens Up on Vijay s Political Entry Says She Won t Campaign for Him
Photo Credit:

ஆதரவு எப்படி இருக்கிறது?: விஜய்க்கு சுத்தமாக ஆதரவு இல்லையென்றே சொல்லிவிட முடியாது. அதேசமயம் அவருக்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறுமா என்பதுதான் இப்போதைக்கு மிகப்பெரிய கேள்வி. பல வீடுகளில் இருக்கும் சிறுவர்களும், சிறுமிகளும் தங்களது தந்தை, தாயிடம் விஜய்க்கு வாக்கு செலுத்தும்படி சொல்கிறார்கள்தான். ஆனால் விஜய் சிறுவர், சிறுமிகளை கவர்ந்தது போல் பெரியவர்களையும் கவர்ந்தால்தான் வாக்குகள் கிடைக்கும் என்பது எதார்த்தம். அதில் கொஞ்சம் தடுமாறவே செய்கிறார்.

திரைத்துறையில் ஆதரவு: சாமானிய மக்களை பொறுத்தவரை நிலைமை இப்படித்தான் இருக்கிறது. திரைத்துறையை பொறுத்தவரை சிலர் விஜய்க்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்தான். இருந்தாலும் அந்த ஆதரவெல்லாம் பத்தாது என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அவர். அப்போது அவரிடம் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷின் பதில்: அதற்கு பதிலளித்த அவர், "நடிகர் விஜய்யை எனக்கு மிகவும் பிடிக்கும். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதேசமயம் அப்படி வருபவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். விஜய் பிரசாரத்துக்கு அழைத்தால் செல்வீர்களா என பலர் கேட்கிறீர்கள். அதற்கெல்லம் வாய்ப்பே இல்லை" என்றார். அவரது இந்த பதில் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா செம தெளிவாக இருக்காங்க ப்பா என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

ஐஸ்வர்யாவின் கரியர்: ஐஸ்வர்யா ராஜேஷின் கரியரை பொறுத்தவரை தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியான ந்டைகையாக வலம் வருகிறார். சிறப்பான நடிகை என்ற பெயரையும் அவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் தமிழில் தீயவர் குலை நடுங்க படத்தில் நடித்திருந்தார். அது தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக கறுப்பர் நகரம், மோகன்தாஸ் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X