இந்த 5 வருடம் எப்படி இருக்கும்.. நானும் வெயிட்டிங்.. அமைச்சர் ராஜ்மோகன் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை: விருதுநகரில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம், திரைத்துறையில் அனுபவமே இல்லாத ராஜ்மோகனுக்கு திரைத்துறை கொடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெளிவான பதில் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: விருது நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், வடசென்னை 2 பற்றி அப்டேட் வேண்டும் என்றால் நீங்கள் வெற்றி மாறனிடம் தான் கேட்க வேண்டும். நானும் உங்களை போல அந்த படத்திற்காகத்தான் காத்து இருக்கிறேன் என்றார். தொடர்ந்து அவரிடம் திரைத்துறை அமைச்சராக ராஜ்மோகன் பதவியேற்றது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், நிச்சயமாக அவர்கள் சரியான முடிவை தான் எடுத்திருப்பார். ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்கு காரணமில்லாமல் அந்த பதவி கிடைக்காது. ஏதோ ஒரு திறமை இருந்ததால்தான் அந்த பதவி அவருக்கு கொடுத்து இருப்பார்கள். நானும் உங்களைப் போலவே இந்த ஐந்து ஆண்டுகள் எப்படி இருக்கப் போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார்.

Aishwarya Rajesh Interview
Photo Credit:

கதைகளை தேர்வு செய்து நடிப்பேன்: தனது அடுத்த படம் குறித்து பேசிய அவர்,'Under 18' படத்தின் பூஜை 29ஆம் தேதி நடைபெற்றது. வெற்றிமாறன் அவர்களின் அசோசியேட் இயக்கும் இந்த படம் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறேன். எனக்கு நல்ல கதைகள் மிகவும் பிடிக்கும். அதனால் தான் அந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன். தெலுங்கில் ஒரு கமர்ஷியல் படத்தில் நடித்தேன். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதே போல தமிழிலும் எல்லா வகையான படங்களிலும் நடிக்க வேண்டும் என்பதும் என் ஆசை என்றார். திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்து வருவது குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது பலர் ஓடிடியில் படம் பார்க்க பழகிவிட்டார்கள். அதனால் தியேட்டருக்கு வரும் மக்கள் சற்று குறைந்திருக்கிறது என்பது ஒரு வருத்தம். ஆனால் படம் நல்லதாக இருந்தால் ரசிகர்கள் கண்டிப்பாக தியேட்டருக்கு வந்து ஆதரவு தருவார்கள் என்பதற்கு உதாரணம் கருப்பு படம் தியேட்டரில் வெளியாகி மக்களிடம் பாராட்டை பெற்று வருகிறது என் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த பேட்டியில் பலவிஷயம் குறித்து பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X