விஜய் எடுத்த அந்த முடிவு.. முழுக்க முழுக்க சப்போர்ட் செய்யும் நடிகை.. சிம்ப்பிளா சொன்னாலும் வொர்த்து

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் விஜய்; நேற்று தனது அமைச்சரவையையும் விரிவாக்கம் செய்தார். அதில் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. தவெகவை சேர்ந்த ராஜ்மோகன் திரைப்பட துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முதலில் விஷால் எதிர்ப்பு தெரிவித்தார். இப்படிப்பட்ட சூழலில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வென்று இந்த மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் விஜய். இத்தனை வருடங்களில் இல்லாத ஒரு பழக்கமாக அமைச்சரவையில் மற்ற கட்சிகளையும் சேர்த்திருக்கிறார். அது பெரும்பாலானவர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இனிமேல் வரவிருக்கும் தமிழ்நாடு அரசியல் களம்; கண்டிப்பாக அதிகாரத்தில் பங்கு என்பதை சந்திக்கும் என விஜய் உணர்த்திவிட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள். அவரது அமைச்சரவையில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஏழு பேரும், பெண்கள் நான்கு பேரும் அமைச்சர்களாகியிருக்கிறார்கள்.

Aishwarya Rajesh Reacts to Vijay Government s Film Minister Appointment Controversy
Photo Credit:

குவியும் பாராட்டு: தவெகவின் இந்த முடிவுக்கு இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றன. விசிகவிலிருந்து வன்னி அரசு அமைச்சராகிறார். பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி ஆட்சி, கூட்டணி அதிகாரம் என்ற ஒரு விஷயம் இப்போது நடந்திருப்பது தமிழ்நாடு அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

Also Read
Karuppu Day 7 Box Office - கருப்பு 7வது நாள் வசூல் என்ன தெரியுமா?.. ஒரு வார பாக்ஸ் ஆஃபிஸ் சூப்பர்
Karuppu Day 7 Box Office - கருப்பு 7வது நாள் வசூல் என்ன தெரியுமா?.. ஒரு வார பாக்ஸ் ஆஃபிஸ் சூப்பர்

எழுந்த விமர்சனங்கள்: இதற்கிடையே தவெகவை சேர்ந்த ராஜ்மோகன் திரைப்பட துறை அமைச்சராகவும் ஆக்கப்பட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஷால், "திரையலகத்தில் அனுபவமே இல்லாத ஒருவரிடம் இந்த துறையை ஒப்படைப்பதில் எனக்கு விருப்பமில்லை. 30 வருடங்கள் அனுபவம் கொண்ட விஜய்யே இந்த துறையை நிர்வகிக்க வேண்டும். திரையுலக பிரச்னைகள் பற்றி அமைச்சர்களிடம் சொல்வதைவிடவும் நேரடியாக முதலமைச்சர் விஜய்யிடம் சொல்வதே பயனளிக்கும்" என்றார்.

சப்போர்ட்டுக்கு வந்த அருண் விஜய்: அவரது இந்த விமர்சனத்துக்கு அருண் விஜய், சிபி ராஜ் உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தார்கள். அருண் விஜய் வெளியிட்டிருந்த ஒரு பதிவில், "தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்து உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள். அரசு எடுத்திருக்கும் முடிவில் தலையிட வேண்டாம். அவர் நம் துறை சார்ந்த பிரச்னைகளை தீர்த்து வைப்பார் என்று நம்புவோம்" என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது: அவர் விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "அவர்கள் முடிவு எடுக்கிறார்கள். அந்த முடிவில் நாம் தலையிட முடியாது. சரியான முடிவைத்தான் எடுப்பார்கள். யாருக்கும் சும்மா ஒரு பதவியை கொடுத்துவிட மாட்டார். ஏதேனும் ஒரு விஷயம் இருந்தால்தான் கொடுப்பார்கள். நானும் உங்களை போன்றுதான் எதிர்பார்க்கிறேன். அடுத்த ஐந்து வருடங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X