அப்போ முட்டை தோசை.. இப்போ டல்கோனா காஃபி.. கிச்சன் கில்லாடி ஆகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கிச்சனில் சூப்பரா டல்கோனா காபியை போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Dalgona Coffee Challenge | Quarantine | Aiswarya Rajesh | Vani Bhojan | Swarnamalya

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஹீரோயின்கள் எல்லாம், கிச்சன் பக்கம் சென்று, கிச்சன் கில்லாடிகளாக மாறி வருகின்றனர்.

மேலும், வீட்டு வேலைகளான பாத்திரம் கழுவுதல், வீட்டை சுத்தம் செய்தல் என பல விஷயங்களை இந்த குவாரண்டின் டைமில் செய்து வருகின்றனர்.

ஹவுஸ் அரெஸ்ட்

ஹவுஸ் அரெஸ்ட்

கொரோனா பாதிப்பு காரணமாக உலகமே முடங்கிக் கிடக்கிறது. இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை டோட்டல் லாக் டவுன் போடப்பட்டிருப்பதால், பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் வீட்டிலேயே ஹவுஸ் அரெஸ்ட் ஆகி உள்ளனர். இந்த குவாரண்டின் நேரத்தை உபயோகமாக சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் பயன்படுத்தி வருகின்றனர்.

முட்டை தோசை

அம்மா, தங்கை, ஹீரோயின் என என்ன ரோல் கொடுத்தாலும், தனது நடிப்பால் அசத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்த மார்ச் 4ம் தேதி தனது இன்ஸ்டா பக்கத்தில், ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ஸ்டைலாக முட்டை தோசை செய்து, படக்குழுவினருக்கு வழங்கிய வீடியோவை வெளியிட்டு வைரலாக்கினார்.

டல்கோனா காபி

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் ஹாயாக ரெஸ்ட் எடுத்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் டல்கோனா காபி எப்படி செய்வது என தனது கிச்சனில் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்து அசத்தும் வீடியோவை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

எப்படி செய்வது

எப்படி செய்வது

அரை ஸ்பூன் காபி பவுடருடன், மூன்று ஸ்பூன் சக்கரை கலந்து, இரண்டையும் பேஸ்ட்டாக வரும் அளவுக்கு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். குளிர்ந்த பாலின் மீது, அந்த காபி மிக்ஸிங்கை ஊற்றி அதன் மீது, கொஞ்சம் இலவங்கப்பட்டை தூள் சேர்க்க டேஸ்ட்டியான டல்கோனா காபி ரெடி.

வித விதமா

வித விதமா

அதுமட்டுமின்றி, அஷ்ட கோணங்களில் எமோஜி ஃபேஸ் லுக் போல ரியாக்‌ஷன்ஸ் கொடுத்து எடுக்கபட்டுள்ள தனது புகைப்படத்தையும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக தமிழில் வானம் கொட்டட்டும் படம் வெளியானது. தெலுங்கில் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் ரிலீசானது.

அடுத்தடுத்து

அடுத்தடுத்து

தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தெலுங்கில் டக் ஜகதீஷ் படமும், தமிழில், துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஹீரோயினாக மட்டுமின்றி கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து அசத்துகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X