»   »  இந்த நடிகைக்கு வந்த திடீர் வாழ்வை பாரு: வியக்கும் சக நடிகைகள்

இந்த நடிகைக்கு வந்த திடீர் வாழ்வை பாரு: வியக்கும் சக நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வட சென்னை படத்தில் நடிப்பதன் மூலம் தனுஷுடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நனவாகிவிட்டதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

நல்லா நடிக்கத் தெரிந்த பொண்ணு என்று பெயர் வாங்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தனுஷ் தயாரித்த காக்கா முட்டை படத்தில் இரண்டு பசங்களுக்கு தாயாக நடித்து அனைவரையும் அசத்தினார்.

நடிக்கத் தெரிந்தாலும் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் இருந்தது.

துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம்

கவுதம் மேனன் விக்ரமை வைத்து இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். பெரிய ஹீரோவுடன் நடிக்க விரும்பிய அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

வட சென்னை

வட சென்னை

ஐஸ்வர்யா ராஜேஷ் ஆசைப்பட்டது போன்று பெரிய ஹீரோவுடன் ஜோடி சேர்ந்துவிட்டாரே என்று பலரும் வியந்தபோதே அவருக்கு தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

தனுஷ்

தனுஷ்

வெற்றிமாறன் தனுஷை வைத்து இயக்கி வரும் வட சென்னை படத்தில் இருந்து அமலா பால் வெளியேற அந்த வாய்ப்பு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்துள்ளது.

கனவு

கனவு

தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்று கனவு கண்டு வந்தேன். அந்த கனவு வட சென்னை படம் மூலம் நிறைவேறியுள்ளது என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

English summary
Aishwarya Rajesh is acting with Dhanush in Vada Chennai being directed by Vetrimaran. She has bagged this offer after Vikram's Dhruva Natchathiram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil