ரத்தம் சொட்ட சொட்ட நிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் …“டிரைவர் ஜமுனா“ கதை இதுதான் !

சென்னை : ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடிக்கும் டிரைவர் ஜமுனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு என்று தனி இடம் உண்டு. கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மோகன் தாஸ் , தீயவர்குலை நடுங்க, தி கிரெட் இந்தியன் கிச்சன், துருவநட்சத்திரம் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

டிரைவர் ஜமுனா

டிரைவர் ஜமுனா

இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் டிரைவர் ஜமுனா. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ஸ்டான்ட் அப் காமடியன் அபிஷேக், மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசை

ஜிப்ரான் இசை

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் 18 ரீல்ஸ் சார்பில், பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி திரைப்பட தயாரிப்பாளருமான எஸ். பி. சௌத்ரி தயாரித்திருக்கிறார்.

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர்களில் ரத்தம் சொட்ட சொட்ட காயத்துடன் காரின் முன் டீ குடிக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் படம் வெற்றி பெறவாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நோ டூப்

நோ டூப்

இப்படத்தில் கேப் டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். பெண் டிரைவரின் ஒருநாள் பயணத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பெண் டாக்ஸி ஓட்டுநர்களை நேரில் சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்து நடித்துள்ளார். மேலும் பல காட்சிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் டூப் போடாமல் நடித்துள்ளார்.

Recommended Video

Rajkamal | Latha Rao | எங்க வீட்டு Bathroom கதை | Filmibeat Tamil
கைவசம் உள்ள படம்

கைவசம் உள்ள படம்

இந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் வெற்றிபெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் பெண்களின் உரிமையை மையப்படுத்தி உருவாகும் 'ஹெர்' என்கிற படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X