ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மா யாரு தெரியுமா?.. பாலகிருஷ்ணாவுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்த மகள்!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அம்மாவின் பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் அவருடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா, அம்மா, தாத்தா என அனைவருமே தெலுங்கு சினிமா பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷின் தாத்தா அமர்நாத் நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். அவருடைய அப்பா ராஜேஷும் நடிகர் தான். ஆனால், ராஜேஷ் உயிரிழந்த நிலையில், டோலிவுட் படங்களில் டான்ஸராக பணியாற்றி வந்த ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா நாகமணி தான் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிக் பாஸ் மணிகண்டனை ரொம்பவே கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார்.

aishwarya rajesh aishwarya rajesh mother heroine


தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

வேறலெவல் நடிப்பு: அட்டகத்தி, காக்கா முட்டை, வடசென்னை, தர்மதுரை, க/பெ. ரணசிங்கம், கனா உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் குழந்தை பருவத்திலேயே ராம்பண்டு எனும் தெலுங்கு படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார். அதற்கு காரணம் அவரது அம்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாவுக்கு பிறந்தநாள்: தெலுங்கில் பல படங்களில் நடனக் கலைஞராக பணியாற்றி வந்த நாகமணி தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா. அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அம்மாவின் புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

பாலகிருஷ்ணாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மா: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் தனது அம்மாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்ற புகைப்படத்தையும் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழில் பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சொதப்பிய உமன் சென்ட்ரிக் படங்கள்: நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, சமந்தா போல ஐஸ்வர்யா ராஜேஷும் உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார். கனா, க/பெ. ரணசிங்கம் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழில் வெளியான டியர் படம் தோல்வியைத் தழுவியது. மலையாளத்தில் டொவினோ தாமஸ் உடன் இணைந்து ஏஆர்எம் படத்தில் நடித்திருந்தார். மேலும், ஹெர் எனும் படத்திலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டும் அவர் நடிப்பில் வெளியான சொப்பன சுந்தரி, தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், ஃபர்ஹானா உள்ளிட்ட படங்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை.

2025 பெரிய லைன் அப்: அடுத்த ஆண்டு சங்கராந்தி வஸ்துன்னாம், கருப்பர் நகரம், மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, உத்தரகாண்டா உள்ளிட்ட பல படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. நிச்சயம் ஐஸ்வர்யா ராஜேஷ் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X