கருப்பு தான் அழகு.. கிளியோபாட்ராவே தோத்துடுவாங்க போல.. ஐஸ்வர்யா ராஜேஷ் சும்மா அதிர விடுறாங்க!
சென்னை: 34 வயதாகும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையை அணிந்துக்கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்திற்கு முன்னதாகவே தமிழில் சில படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். ஆனால், அட்டகத்தி படத்திற்கு பிறகு தான் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தன.

காக்கா முட்டை படத்திலேயே ஹீரோ இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அசத்தி இருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகப்பெரிய வெற்றியையும் அங்கீகாரத்தையும் கொடுத்தது.
கதையின் நாயகி: கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நடிகர்களுடன் சமீப காலமாக ஜோடி போடாமல் உமன் சென்ட்ரிக் படங்களில் அதிகம் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அரை டஜன் படங்கள் வெளியாகி விட்டன. ஆனால், எந்தப் படமும் அவருக்கு ஓடவில்லை.

தொடர் தோல்வி: கனா, க/பெ. ரணசிங்கம் படங்கள் ஓடிய அளவுக்கு சமீப காலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடுவதில்லை. ஆனாலும், விடாமுயற்சியாக தொடர்ந்து புதிய படங்களில் கமீட் ஆகி நடித்து வருகிறார். இந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜி.வி. பிரகாஷ் நடித்த டியர் திரைப்படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. பிரியா பவானி சங்கருக்கு வரும் அத்தனை ட்ரோல்களும் சமீப காலமாக சிறப்பாக நடிக்கக் கூடிய ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் எழுந்து வருகிறது.

கருப்பு தான் அழகு: ஹோம்லி லுக்கில் பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கிளாமர் போட்டோக்களையும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அப்படியாவது இயக்குநர்கள் தனக்கு மாடர்ன் கேர்ள் கதாபாத்திரங்களை கொடுத்து விட மாட்டார்களா என்கிற எண்ணம் தான் என கமெண்ட்டுகள் குவிகின்றன. இந்நிலையில், கருப்பு தான் அழகு என லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோக்களை அடுக்கியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சும்மா அதிருது: ஐஸ்வர்யா ராஜேஷின் இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் என்றுமே ஃபிளாப் ஆனதில்லை. புகைப்படங்கள் வெளியான மாத்திரத்திலேயே அது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி விடுகின்றன. எக்கச்சக்க லைக்குகளுடன் தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளையும் பெற்று வருகின்றன. கிளியோபாட்ரா மாதிரி இருக்கீங்க என்றும் இணையமே அதிருது என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
கைவசம் பல படங்கள்: இயக்குநர்களையும் புதிய கதைகளையும் பார்த்து பார்த்து தேர்வு செய்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நினைத்தது போல வெற்றி கிடைப்பதில்லை. ஆனாலும், அவரது கைவசம் தற்போது கருப்பர் நகரம், மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட்ட தமிழ் படங்களும் அஜயண்டே மோஷனம், ஹெர் என 2 மலையாள படங்களும் உத்தரகாண்டா எனும் கன்னட திரைப்படமும் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், ஷுட்டிங்கில் இருந்து சின்ன பிரேக் எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வந்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும், நகைக்கடை திறப்பு விழா ஒன்றிலும் சமீபத்தில் அவர் கலந்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











