சரக்கு முதல் சாமி வரை.. ஐஸ்வர்யா ராஜேஷ் இறக்கிய தரமான போட்டோஸ் & வீடியோஸ்.. ஒரே குஜிலிமஸ்த் தான் போல
சென்னை: தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், தற்போது அமெரிக்காவில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதற்கு "My trip to the states" என்று கேப்ஷனும் கொடுத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர். புதிய படங்களின் அப்டேட்கள், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், பயண அனுபவங்கள் என அவ்வப்போது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது அவரது வழக்கம்.

அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள பதிவில் அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் சுற்றிப்பார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன. நண்பர்களுடன் எடுத்த செல்ஃபி, மலைப்பகுதிகளில் எடுத்த புகைப்படங்கள், அருவி அருகே நின்று போஸ் கொடுத்த காட்சிகள், நகரத்தின் அழகை ரசித்த தருணங்கள் என பல்வேறு இடங்களில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதில் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது சாய் பாபா கோவிலில் அவர் வழிபாடு செய்த புகைப்படம். முழங்கால் போட்டு அமர்ந்து சாய் பாபாவை தரிசனம் செய்த காட்சியையும் அவர் பகிர்ந்துள்ளார். அதே நேரத்தில் அமெரிக்காவில் அழகாக உள்ள மலைப்பகுதிகள், அருவிகள் மற்றும் நகரங்களிலும் விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்த புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
சரக்கா?: இதோடு பயணத்தின் போது ஹெட்போன் அணிந்தபடி கண்ணாடி கோப்பையில் கூல்டிரிங் போல எதையோ கையில் வைத்திருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இதனால்தான் இணையத்தில், "சரக்கு முதல் சாமி வரை... எல்லாத்தையும் ஒரே ட்ரிப்பில் கவர் பண்ணிட்டாங்க போல" என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் அந்த கண்ணாடி கோப்பையில் என்ன உள்ளது என்பது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் எதுவும் குறிப்பிடவில்லை.

குஜிலிமஸ்த்: "My trip to the states" என்ற ஒரே கேப்ஷனுடன் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில், வழக்கம்போல ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர். சிலர் அவரது எளிமையை பாராட்டி பதிவிட்டுள்ள நிலையில், இன்னும் சிலர் "ஒரே குஜிலிமஸ்த் ட்ரிப் போல இருக்கே!" என்று ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications