துபாயில் ஜாலியாக ஷாப்பிங் செய்த ஐஸ்வர்யா ராஜேஷின் படம் வெளியாகியுள்ளது
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திட்டம் இரண்டு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார். இந்த நிலையில் துபாய்க்கு ஜாலி ட்ரிப் சென்ற இடத்தில் விதவிதமான பொருட்களை செம ஜாலியாக ஷாப்பிங் செய்து உள்ளார்.

திறமை தான் இங்கு முக்கியம்
எந்த ஒரு திரைப் பின்புலமும் இல்லாமல் திரைத்துறையில் பல தடைகளையும் சோதனைகளையும் தாண்டி இப்பொழுது வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நடிகை ஆவதற்கு நிறம் ஒரு பொருட்டல்ல திறமை தான் இங்கு முக்கியம் என்பதை நிரூபித்து காட்டியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி பெற்று வருகிறது.

மிரட்டலான நடிப்பு
ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் அதேசமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து நடித்த க பெ ரணசிங்கம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் இதுவரை வெளியான படங்களிலேயே க பெ ரணசிங்கம் என திரைப்படம் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது மிரட்டலான நடிப்பு இந்தப் படத்தில் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது

திட்டம் இரண்டு
க பெ ரணசிங்கம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நடித்த திட்டம் இரண்டு திரைப்படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
திரில்லர் பின்னணியில் வெளியான திட்டம் இரண்டு மிகச் சிறந்த திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெறும் கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் வியப்படைய வைத்தது. எனவே தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது டிரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்து வருகிறார்

தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழில் ரீமேக்
மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று விருதுகளை குவித்த தி கிரேட் இந்தியன் கிட்சன் திரைப்படம் தமிழில் தற்போது உருவாகி வருகிறது. இன்றளவும் இந்திய பெண்கள் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகிறார்கள் என்பதை மிக தத்ரூபமாக காட்டியிருந்த தி கிரேட் இந்தியன் கிட்சன் திரைப்படம் தமிழில் தயாராகிறது . இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடிக்க அவருக்கு ஜோடியாக ராகுல் ஒப்பந்தமாகியுள்ளார். ஆர் கண்ணன் இந்த படத்தை இயக்கி தயாரித்து வருகிறார்.
Recommended Video

துபாயில் ஜாலி ஷாப்பிங்
இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் படு பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் துபாய் சென்றுள்ளார். துபாயில் தனக்கு பிடித்த பொருட்களை தேடித்தேடி ஷாப்பிங் செய்த செம ஜாலியான புகைப்படங்களை இப்பொழுது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











