ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஓ! சுகுமாரி' டிரைலர் எப்படி இருக்கு?.. கலக்குறாங்களே!

ஹைதராபாத்: ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் இரண்டு பாடல்களின் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'ஓ! சுகுமாரி' திரைப்படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம், காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணி நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படைப்பாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை கங்கா எண்டர்டெயின்மென்ட்ஸ் (Gangaa Entertainments) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் விறுவிறுப்பான திரையரங்க வெளியீட்டு ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Aishwarya Rajesh starrer Oh Sukumari Trailer Out Now

இந்த ட்ரெய்லரில், 'தாமினி' என்ற துடுக்குத்தனமான இளம்பெண் அறிமுகப்படுத்தப்படுகிறாள். அவளது விசித்திரமான தன்மையைக் கண்டு ஊரே அஞ்சுகிறது. அதாவது, அவளைத் தொடுபவர்களுக்கு மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்ச்சி (Electric Shock) ஏற்படுகிறது. இந்த விசித்திரமான ரகசியத்தை மறைத்து, அவளது குடும்பத்தினர் அவளுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு தனக்கு என்ன காத்திருக்கிறது என்பதை அறியாத நாயகன், இந்த அசாதாரண சூழலை எவ்வாறு எதிர்கொள்கிறான்? அவர்களுக்கு இடையே ஏற்படும் கலகலப்பான நகர்வுகளும், எதிர்பாராத திருப்பங்களும் தான் படத்தின் அடுத்தகட்ட நகர்வாக அமைகின்றன. இந்த சவால்களைத் தம்பதியினர் இருவரும் கடந்து எவ்வாறு காதலிலும் மகிழ்ச்சியிலும் இணைகிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் விவரிக்கிறது இத்திரைப்படம்.

இயக்குநர் பரத் தர்ஷன், உணர்ச்சிகரமான தருணங்களையும் நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலந்து இந்த கதையை இயக்கியுள்ளார். நடிகர் திரு வீர், கவலையற்ற கிராமத்து இளைஞராக கச்சிதமாகப் பொருந்தி, தனது துடிப்பான நடிப்பின் மூலம் மீண்டும் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதை நிரூபித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், தனது கதாபாத்திரத்தின் ஆழத்தையும் அழகையும் திரையில் மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுடன் முரளிதர் கௌட், விஷ்ணு ஒய், ஜான்சி, ஆமனி மற்றும் ஆனந்த் கோட்டா ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் சி.எச். குஷேந்தர் கிராமத்துக் காட்சிகளை நேர்த்தியாகவும் அழகாகவும் படமாக்கியுள்ளார். இசையமைப்பாளர் பரத் மஞ்சிராஜுவின் பின்னணி இசை, இந்த கலகலப்பான கதைக்களத்திற்குப் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இப்படத்திற்கு திருமலா எம். திருப்பதி கலை இயக்குநராகப் பணியாற்ற, படத்தொகுப்பை ஸ்ரீ வர பிரசாத் மேற்கொண்டுள்ளார்.

நகைச்சுவை, காதல் மற்றும் குடும்ப உணர்வுகளின் அட்டகாசமான கலவையாக உருவாகியுள்ள 'ஓ! சுகுமாரி' படம், ஒரு சிறந்த குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கையை இந்த ட்ரெய்லர் ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூலை 17ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X