காபின்னு சொன்ன மீரா.. தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கி கெத்து காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை: பிரபல பிளேபாய் புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரனே சமீபத்தில் கொடுத்த பேட்டியில், புகைப்படங்களை இன்ஸ்பயர் பண்ணித் தான் எடுக்க முடியும் என்றும் தானும் அப்படித்தான் எடுத்து வருகிறேன் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், தனது புகைப்படங்களை பார்த்துத் தான் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் காப்பி அடிக்கின்றனர் என மீரா மிதுன் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வந்தர்.

இந்நிலையில், தொடர்ந்து தனது கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களை களமிறக்கி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

திறமையான நடிகை

திறமையான நடிகை

சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு? நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், மாநாட மயிலாட ஷோவில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார். பின்னர், 2010ம் ஆண்டு வெளியான நீதானா அவன் எனும் படத்தின் மூலம் அறிமுகமான அவருக்கு அட்டக்கத்தி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

பொருத்தமான ஜோடி

பொருத்தமான ஜோடி

ரம்மி படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து, இருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற "கூடை மேல கூடை வச்சி" பாடலில் இருவருக்கும் செம கெமிஸ்ட்ரி இருப்பதை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர். தொடர்ந்து, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, க/பெ. ரணசிங்கம் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

மீரா மிதுன் குற்றச்சாட்டு

மீரா மிதுன் குற்றச்சாட்டு

பாலிவுட் நடிகை கியாரா அத்வானியில் தொடங்கி திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல நடிகைகளும் தன்னைப் பார்த்தும் தனது ஸ்டைலையும் பார்த்தும் தான் காப்பி அடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை மீரா மிதுன் வைத்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக புதுசு புதுசா போட்டோஷூட் நடத்தி கெத்து காட்டி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

யாரையும் காப்பியடிக்கல

யாரையும் காப்பியடிக்கல

இந்த போட்டோஷூட் 2018ல் எடுத்தது.. விதவிதமான எக்ஸ்பிரஷன்ஸ் நல்லா பார்த்துக்கோங்க, நான் யாரையுமே காப்பி அடிக்கல என தன் மீது வீணாக குற்றம்சாட்டிய மீரா மிதுனை மறைமுகமாக கலாய்த்து இருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த புகைப்படத்தை பார்த்த ரெஜினா கஸாண்ட்ரா, கிகி விஜய் எல்லாம் பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.

ஸ்ட்ராப்லெஸ் உடையில்

ஸ்ட்ராப்லெஸ் உடையில்

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு கிளாமர் போட்டோஷூட் புகைப்படத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விலையுயர்ந்த கற்களில் முத்து தான் ராணி என முத்து மாலையை அணிந்து கொண்டு நடத்திய போட்டோஷூட் புகைப்படத்திற்கு பக்காவாக கேப்ஷனும் கொடுத்துள்ளார்.

பாவ்னா பாலகிருஷ்ணன்

பாவ்னா பாலகிருஷ்ணன்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சற்று முன் பதிவிட்ட இந்த புகைப்படத்தை பார்த்த விஜய் டிவி தொகுப்பாளினி பாவ்னா பாலகிருஷ்ணன் ஸ்டன்னிங் என கமெண்ட் செய்துள்ளார். மேலும், பல பிரபலங்களும் கமெண்ட் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X