நான் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.. என்ன ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபனா சொல்லிட்டாங்க?
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக தெலுங்கில் சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக தமிழில் கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இரண்டு மலையாள படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். முக்கியமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார் அவர். அதனாலேயே அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழலில் அவர் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் கோலிவுட்டில் இப்போது வளர்ந்த ஹீரோயின்கள் லிஸ்ட்டில் இருக்கிறார். சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரைக்கு வந்த அவர் ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டவர். குடும்பமும் மிடில் கிளாஸ் குடும்பம்தான். ஒருவழியாக சினிமாவில் வாய்ப்பு பெற்று தன்னுடைய திறமையை நிரூபித்துவிட்டார். முக்கியமாக அவரது நடிப்பில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் அவரது கரியரில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது. ஏனெனில் வளர்ந்துவரும் சமயத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க எந்த நடிகையும் யோசிப்பார். ஆனால் ஐஸ்வர்யா அப்படி நினைக்கவில்லை.
வடசென்னை: காக்கா முட்டை திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தாலும் அடவர் எதிர்பார்த்தபடி அடுத்தடுத்து வாய்ப்புகள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை. அது தனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்ததாக அவரே ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க சில படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் வடசென்னை படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா. அதில் போல்டாக கெட்ட வார்த்தை எல்லாம் பேசி நடித்திருந்தார்.
ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட்: தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாகவே கதாநாயகிகளை மையப்படுத்தி படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் அந்த ஜானருக்குள் சென்றிருக்கின்றனர். அவர்கள் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் இருக்கிறார். அவர் நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா உள்ளிட்ட படங்கள் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகவே அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படங்கள் போதுமான வரவேற்பை பெறாவிட்டாலும் ஐஸ்வர்யாவின் கதை தேர்வு பலரையும் ரசிக்க வைத்தது.

அடுத்தடுத்த படங்கள்: தமிழில் மட்டும் நடித்துவந்த அவர் புலிமடா படத்தின் மூலம் மலையாளத்தில் எண்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக தமிழில் அவர் கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் அஜயண்டே ரண்டம் மோஷனம், ஹெர் ஆகிய படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார்.
தெலுங்கில் ஐஸ்வர்யா: இதற்கிடையே அவர் தெலுங்கு படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி படத்தில் தெலுங்கில் அறிமுகமான அவர், மிஸ் மேட்ச், World Famous Lover, டக் ஜெகதீஷ், ரிபப்ளிக் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அங்கும் கதைக்கு என்ன தேவையோ அதற்கான கதாபாத்திரத்தை ஏற்றார். குறிப்பாக World Famous Lover படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்தார். கடைசியாக அவர் சங்கராந்திகி வஸ்துனம் படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.
ஐஸ்வர்யாவின் பேச்சு: இந்நிலையில் அவர் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவரிடம் நீங்கள் வெள்ளை நிறமா என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவரோ, 'நான் வெள்ளை நிறமெல்லாம் இல்லை. மாநிறம்தான். நம்ம ஊரு கலர்தான். அதுதானே அழகு' என்றார்.மேலும் வடசென்னை 2 திரைப்படம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications











