வேகமாக அடிக்க சொன்னார்.. அதனால் அறைந்தேன்.. ஹீரோவை அறைந்தது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் நடிக்கும் படங்கள் பெரும் வரவேற்பை பெறாவிட்டாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் வெகுவாக கவனம் ஈர்த்துவருகிறார். தமிழில் மட்டும் முதலில் நடித்துவந்த அவர் இப்போது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துவருகிறார். அந்தவகையில் தெலுங்கில் இப்போது சங்கராந்தி வஸ்துனம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனையடுத்து அவருக்கு சினிமாவுக்கான கதவுகள் திறந்தன. அதன்படி சினிமாவுக்குள் நடிக்க வந்த அவருக்கு முதல் படம் பெரிய வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவரது நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதனையடுத்து வரிசையாக அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது திறமையை நிரூபித்தார்.

aishwarya rajesh sankranthiki vasthunam

காக்கா முட்டை: பொதுவாக ஒரு நடிகை வளர்ந்துவரும் நேரத்தில் அம்மா கதாபாத்திரத்தை ஏற்க தயங்குவார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படி எதுவுமே யோசிக்காமல் காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். அதில் தனது நடிப்பு திறமையை அசால்ட்டாக வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆச்சரியப்பட்டார்கள். அதேசமயம் அப்படத்துக்கு பிறகு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது.

வடசென்னை: காக்கா முட்டை படத்துக்கு பிறகு சில காலம் வாய்ப்புகள் எதுவும் ஐஸ்வர்யாவுக்கு கிடைக்கவில்லை. பிறகு மெல்ல மெல்ல அவருக்கு வாய்ப்புகள் வந்தன. அப்படி வந்ததுதான் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படம். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது என்று ரசிகர்கள் கூறினார்கள். முக்கியமாக கெட்ட வார்த்தைகள் பேசும் சீனில் எல்லாம் ஐஸ்வர்யா ராஜேஷ் எந்தவித தயக்கமுமின்றி போல்டாக நடித்திருந்தார்.

மற்ற மொழிகளில்: தமிழில் மட்டும் நடித்துவந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி சினிமாக்களிலும் அதிகம் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். மலையாளத்தில் அவர் புலிமடா, அஜயண்டே ரண்டம் மோஷனம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்தப் படங்கள் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அதேபோல் தெலுங்கிலும் டக் ஜெகதீஷ், ரிபப்ளிக் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சங்கராந்திகி வஸ்துனம்: இப்போது வெங்கடேஷ், மீனாட்சி சௌதரி உள்ளிட்டோருடன் சங்கராந்திகி வஸ்துனம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். படமானது நாளை வெளியாகவிருக்கும் சூழலில் ராணா டகுபதி நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் வெங்கடேஷுடன் கலந்துகொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்போது பேசிய அவர், “படத்தில் வெங்கடேஷை அறையும்படியான ஒரு சீன் இருக்கிறது. முதலில் அவரை நான் மெதுவாகத்தான் அடித்தேன். அடிக்கும்போது வலிக்கவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவரோ வலிக்கவில்லை. இன்னும் வேகமாக அடி என்று கூறினார். அதனையடுத்துதான் அவரது கன்னத்தில் பலமாக அறைந்தேன்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X