“ஓடாத படத்துக்கெல்லாம் வெற்றிவிழா கொண்டாடுறாங்கப்பா”... கனா சக்சஸ் மீட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் நக்கல்!
கனா வெற்றி விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கவுரவிக்கப்பட்டார்.
Recommended Video

சென்னை: ஓடாத படங்களுக்கு எல்லாம் வெற்றி விழா கொண்டாடப்படுவதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெளியாகினாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஓடாத படத்துக்கு எல்லாம் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என நக்கல் அடித்தார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, "குறைந்த திரையரங்குகளே கிடைத்தாலும், இந்த திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. ஒரு படம் தயாரிக்கும் போது நிறைய விஷயங்களை யோசிப்பார்கள். அப்படியும் என் மீது நம்பிக்கை வைத்த சிவா சார், கலையரசு, அருண்ராஜாவுக்கு நன்றி. கிரிக்கெட் தெரியாத என்னை நம்பிய அவர்களுக்கு நன்றி.
என் அப்பா இல்லாத குறை தெரிந்ததே இல்லை. அப்படி என்னை வளர்த்தார் அம்மா. இந்த படம் நடித்த பிறகு, இனிமே நீ படமே நடிக்கவில்லையென்றால் கூட பரவாயில்லை. இது போதும் உன் சினிமா வாழ்க்கைக்கு என்று என் அம்மா சொன்னாங்க. எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு இது தான். என் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்த கிருத்திகாவுக்கும், மோனாவுக்கும் வாழ்த்துக்கள்.
ஒரு சிலர் ஓடாத படத்துக்கு எல்லாம் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். நான் இந்த படத்தை சொல்லவில்லை. கனா உண்மையான வெற்றி படம்" என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.


Click it and Unblock the Notifications











