தெலுங்குல இது மூணு... நானிக்கு மைத்துனி ஆன ஐஸ்வர்யா ராஜேஷ்

By

ஐதராபாத்: நானி ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில், அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, நம்ம வீட்டுப் பிள்ளை உட்பட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற படத்தில் நடித்திருந்தார். இது தமிழில் வெளியான கனா படத்தின் ரீமேக்.

 Aishwarya Rajesh to play Nani’s sister-in-law in telugu movie

இதையடுத்து சலீம் இயக்குனர் நிர்மல்குமாரின் மிஸ் மேட்ச் படத்தில் நடித்தார். இந்தப் படம் நேற்று ரிலீஸ் ஆனது. இதையடுத்து மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

டக் ஜகதிஷ் (Tuck Jagadish) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நானி ஹீரோவாக நடிக்கிறார். இவர், தமிழில் நான் ஈ, ஆஹா கல்யாணம் ஆகிய படங்களில் நடித்தவர்.

 Aishwarya Rajesh to play Nani’s sister-in-law in telugu movie

நானியின் 26 வது படமான இதை ஷிவா நிர்வானா இயக்குகிறார். இவர் நானி, நிவேதா, ஆதி நடித்த நின்னுக்கோரி, சமந்தா, நாக சைதன்யா நடித்த மஜிலி படங்களை இயக்கியவர்.

டக் ஜகதிஷ் படத்தில் ஹீரோயினாக ரிது வர்மா நடிக்கிறார். இவர் தெலுங்கில் ஹிட்டான பெல்லி சூப்புலு படத்தின் ஹீரோயின். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நானியின் மைத்துனியாக நடிக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X