படப்பிடிப்பில் தோசை சுட்டு போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.. காவாலா காவாலா என ஒரே உற்சாகம்!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிசியான நடிகைகளில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாக தமிழில் நடிப்பதைக் காட்டிலும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் அவருக்கு அடுத்தடுத்து வெற்றி குவிந்து வருகிறது. இப்படி இருக்கையில் அவர் படப்பிடிப்புத் தளத்தில் தோசை சுட்டு போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அடிப்படையில் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர். அவரது குடும்பம் சினிமா பின்புலம் உள்ள குடும்பம். அவரது அப்பா ராஜேஷ், தாத்தா அமர்நாத் என இருவரும் தெலுங்கு சினிமாவில் கதாநாயகர்களாக ஜொலித்தவர்கள். அவரது அத்தை ஸ்ரீலட்சுமி தெலுங்கு சினிமாவில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகை. இப்படியான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தாலும், ஐஸ்வர்யா ராஜேஷ் திரையுலகில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார். அதற்காக அவர் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளார்.

Aishwarya Rajesh Turns Chef on Set She Making Dosa and Dining The Coworker Telugu movie Shooting Spot

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட சீசன் 3இல் கலக்கலாக நடனம் ஆடி வெற்றியும் பெற்றார். அதேபோல் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுப்பாளராக பணியாற்றினார். தொலைக்காட்சி அனுபவம் அவருக்கு சினிமா வாய்ப்பை பெற உதவியாக இருந்தாலும், அவருக்கு சினிமா வாழ்க்கை ஆரம்பத்தில் எளிதாக அமைந்துவிடவில்லை.

ஆரம்ப கால நெருக்கடிகள்: போராட்டங்களும் சவால்களும் நிறைந்ததாக இருந்திருந்தால் கூட பிரச்னை இல்லை, ஒரு கை பார்த்துவிடலாம் என்ற தெம்புடன் தொடர்ந்து முயற்சிகளை செய்திருப்பார். ஆனால் ஆடிஷன் சென்ற இடத்தில் எல்லாம், நீ ஹீரோயின் மெட்டீரியல் இல்லை, இந்த டிரஸ் எல்லாம் போட்டுட்டு வா உன் உடம்பைப் பார்க்கனும் என்று எல்லாம் தயாரிப்பாளர்கள் சொல்லி உள்ளார்கள். இவற்றை எல்லாம் தனது சமீபத்திய பேட்டியில் கூட பகிர்ந்து கொண்டார்.

நடிப்பு: தனது முதல் படமான காக்கா முட்டை படத்தில் தனது 24 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து பட வாய்ப்புகள் வர, இன்றைக்கு நிராகரிக்க முடியாத நடிகையாக மாறி நிற்கிறார். தான் வறுமை மற்றும் கஷ்டத்தில் வளர்ந்தவர் என்பதால் அவருக்கு மற்றவர்களின் கஷ்டம் எளிதாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

Aishwarya Rajesh Turns Chef on Set She Making Dosa and Dining The Coworker Telugu movie Shooting Spot

தோசை சுட்டு போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்: சில மாதங்களுக்கு முன்னர் கூட சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு இலவசமாக போர்வை வழங்கினார். ஆதரவற்றவர்களுக்கு நிதி திரட்ட மொய் விருந்து போல ஒன்றை நடத்தினார். இப்படி இருக்கையில் தெலுங்கு படத்தின் படப்பிடிப்புத் தளத்தில், தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கு தோசை சுட்டு, தானே பரிமாறவும் செய்துள்ளார். தோசை கல் முன்பு நின்று கொண்டு, காவாலா... காவாலா.. அதாவது வேண்டுமா.. வேண்டுமா என்று கேட்டு கேட்டு தோசை பரிமாறுகிறார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X