விஜய்யுடன்தான் அங்கு செல்ல வேண்டும்.. அதுதான் ஆசை.. ஓபனாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துவருகிறார். முக்கியமாக ஹீரோயின்களை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக புலிமடா படம் வெளியானது. அடுத்ததாக கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் விஜய் குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆன பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர் தொடர்ந்து உயர்திரு 420, சட்டப்படி குற்றம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு பா.ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டகத்தி படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

Vijay Aishwarya Rajesh GOAT

முன்னணி நடிகை: அந்தப் படத்துக்கு பிறகு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடித்த காக்கா முட்டை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் சினிமாவில் வளர்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் இரு குழந்தைகளுக்கு தாயாக அவர் நடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

முன்னணி நடிகை: திறமையான நடிகையான அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தர்மதுரை, குற்றமே தண்டனை, லட்சுமி, வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். முக்கியமாக வடசென்னை படம் அவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. தற்போது அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, ஃபர்ஹானா ஆகிய படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை.

மலையாளத்தில் ஐஸ்வர்யா: இந்த சூழலில் அவர் மலையாள திரையுலகிலும் புலிமடா படத்தின் மூலம் அறிமுகமானார். ஜோஜு ஜார்ஜ் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே மலையாளத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு ரவுண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அவரது நடிப்பில் கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன.அதுமட்டுமின்றி மலையாளத்தில் அஜயண்டே ரண்டம் மோஷனம், ஹெர் ஆகிய படங்களும் வெளியாகவிருக்கின்றன. மேலும் தெலுங்கு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.

ஐஸ்வர்யாவின் பேட்டி: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷிடம், எந்த ஹீரோவுடன் டின்னர் செல்ல ஆசை என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'நடிகருடன் டின்னர் செல்ல வேண்டுமென்றால் நான் விஜய்யுடன்தான் செல்வேன்' என்றார். விஜய் நடிப்பில் அடுத்ததாக கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகிறது. அதனையடுத்து ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X