புது 'அம்மா' போடும் பலே நிபந்தனை!

கதாநாயகியாக மாறி, பின்னர் வில்லி, குணச்சித்திர கேரக்டர்கள் செய்து வந்த ஐஸ்வர்யா இப்போது அம்மா கேரக்டர்களுக்கு மாறியுள்ளார்.
அவரைத் தேடிய நிறைய அம்மா கேரக்டர்களும் வருகின்றன. ஆனால் அவர் போடும் நிபந்தனைகளைக் கேட்டு பல பட வாய்ப்புகள் ஜகா வாங்கி வருகின்றனவாம்.
இந்த ஹோட்டலில்தான் ரூம் போட வேண்டும், வெளியூர், வெளிநாடு என்றால் முதல் வகுப்பு டிக்கெட்தான் விமானத்தில் போட வேண்டும் என நிபந்தனைகளை அடுக்குகிறாராம் ஐஸ்வர்யா.
இதனால் எரிச்சலடைந்த பல தயாரிப்பாளர்கள் இந்த அம்மா வேண்டாம், வேற அம்மா பார்ப்போம் என்று கூறி ஜகா வாங்கி விடுகிறார்களாம்.
ஆனால் ஐஸ்வர்யாவோ இதுகுறித்தெல்லாம் கவலைப்படுகிறார் போலத் தெரியவில்லை.
Comments
aishwarya அம்மா கேரக்டர் எரிச்சல் ஐஸ்வர்யா தயாரிப்பாளர்கள் நிபந்தனைகள் conditions mother charector producers


Click it and Unblock the Notifications