அய்யோ அவர் ஷூட்டிங் ஸ்பாட்னாலே உடலில் சோர்வுதான்.. மணிரத்னம் பற்றி ஐஸ்வர்யா ராய் ஓபன் டாக்

மும்பை: இந்திய அளவில் பிரபலமானவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். கடந்த 1994ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு வென்றதன் மூலம் வெகு பிரபலமானார். மிஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென்னை விட மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். இந்தியாவிலிருந்து எத்தனை பேர் உலக அழகி பட்டம் வென்றாலும் இந்தியர்கள் மனதில் உலக அழகி என்றவுடன் முதலில் நியாபகத்துக்கு வருபவர் ஐஸ்வர்யா ராய்தான்.

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் இருவர் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அடுத்தடுத்து அவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக டாப் நடிகையாக உயர்ந்தார் அவர். அந்த சமயத்தில் சல்மான் கானுடன் காதலில் விழுந்த ஐஸ்வர்யா சில காரணங்களால் மூன்று வருடங்களுக்கு பிறகு அந்தக் காதலிலிருந்து வெளியே வந்தார்.

Aishwarya Says her Experience in Maniratnams Raavanan Movie Here are the details

தமிழில் ஐஸ்வர்யா: தமிழில் அறிமுகமானாலும் பாலிவுட்டில் புகழடைந்ததை அடுத்து கோலிவுட்டில் செலக்ட்டிவ்வான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படி ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், எந்திரன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நந்தினி: பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் அவர் ஏற்றிருந்த நந்தினி கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கல்கி உருவாக்கியிருந்த கற்பனையான நந்தினி கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராய் உயிர் கொடுத்துவிட்டார் என ரசிகர்கள் புகழ்ந்தனர்.

திருமணம்: இதற்கிடையே சல்மான் கானை காதலித்து வந்த ஐஸ்வர்யா ராய் அந்த உறவிலிருந்து வெளியே வந்தார். பிறகு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்றது. அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரியப்போகிறார்கள் என்றெல்லாம் சில மாதங்களுக்கு முன்பு வதந்தி பரவியது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. இருவரும் சந்தோஷமாகவே வாழ்ந்துவருகிறார்கள்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் மணிரத்னம் குறித்து ஐஸ்வர்யா ராய் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "மணிரத்னத்தின் படப்பிடிப்பு என்றால் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்திருக்க வேண்டும். அனைவரும் ஒரே நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆஜராக வேண்டும். ராவணன் படம் காட்டுக்குள் எடுக்கப்பட்டது. முக்கியமாக இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டது.

உடல் முழுக்க சேறு: அந்தப் படத்தில் உடைகள் கிழிந்து தண்ணீரில் நனைந்து உடலில் சேறு பூச வேண்டியிருந்தது. இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டதால் ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை எடுப்பார்கள். அதனால் எனது உடலில் சேறு நீண்ட நேரம் இருக்கும். அந்தப் படத்தில் நடித்தது பெரிய சவாலாக இருந்தது. அந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் நான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ரொம்பவே சோர்வாக இருந்தேன்"என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X