»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

நியூ படத்தில் லேடி ரகுவரன் போல் நடித்துள்ளாராம் நடிகை ஐஸ்வர்யா

இது ஐஸ்வர்யா ராய் அல்ல... நம்ம ஊர் ஐஸ்வர்யா தான். நடிகை லட்சுமியின் மகள் என்றால் எல்லாருக்கும்எளிதில் புரியும். அம்மா போல் நல்ல வேடங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கலாம் என்றுதான் சினிமாவுக்குள்நுழைந்தார்.

ஆனால் என்ன காரணத்தாலே இவரால் பிரகாசிக்க முடியவில்லை. வாய்ப்பு இல்லாதபோது எல்லா நடிகைள் என்னமுடிவெடுப்பார்களோ அதே முடிவுக்கு இவரும் வந்தார். கவர்ச்சி வேடங்களில் புகுந்து விளையாடினார்.

அதிலும் உள்ளே வெளியே படத்தில் பார்த்திபனுடன் இணைந்து இவர் அடித்த லூட்டி கவர்ச்சியின் உச்சம்.அதன்பின்பு ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்பு இரண்டாவது கதாநாயகியானார். ஒரு காலத்தில்அந்த வாய்ப்புகளும் நின்று போனது. இப்போது டி.வி. சீரியல்களிலும், துணைக் கதாநாயகியாகவும் நடித்துவருகிறார்.

லட்சுமியைப் போலவே இரண்டு, மூன்று திருமணங்கள் என்று போய்க் கொண்டிருக்கிறது இவரதுபர்சனல் லைப்.

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் நியூ படத்தில் வில்லங்கமான வேடத்தில்நடித்துள்ளாராம் ஐஸ்வர்யா. இது குறித்து அவரே சொன்னது:

ஒரு நாள் சூர்யா என் வீட்டுக்கு போன் செய்தார். தான் எடுக்கும் புதிய படத்தில் ஒரு கேரக்டர் இருக்கிறது. நீங்கள்நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். மறுநாள் வீட்டுக்கு வந்து பேசினார். அவர் சொன்ன ஒரு கேரக்டரைக்கேட்டு அதிர்ந்து போனேன்.

கதைப்படி, சாதாரணமாக புகை பிடிக்கும் பழக்கமும், செக்சில் நாட்டமும் உள்ள வுமன் நான். லேடி ரகுவரன்என்றால் பொருத்தமாக இருக்கும். முன்பே இதே போன்ற வேடங்களில் நடித்திருந்தாலும், ஒரு நாள் அவகாசம்கேட்டேன்.

ஆனால், என்னுடைய மாமியார் எனக்கு மிகவும் தைரியம் கொடுத்தார். இந்த வேடத்தைச் செய்தால் நிச்சயம் நல்லபெயர் கிடைக்கும் என்றார். என் கணவரும் தடையேதும் கூறவில்லை. நடிக்கும்போது என்னுடையமேனரிசங்களையும், பாவனைகளையும் ரகுவரன் போல் மாற்றிக் கொண்டேன். என்னுடைய நடிப்பைப் பார்த்துசூர்யா மிகவும் சந்தோஷப்பட்டார் என்கிறார்.

சிகரெட் பிடிக்கிறதை படத்தோட நிறுத்திக்கிட்டா பரவாயில்லை.

இந்தப் படத்தில் சிம்ரன் போதாது என்று கவர்ச்சிக்காக கிரணை சேர்த்த சூர்யா, அவரும் போதாமல் ஐஸ்யையும்வைத்து கலக்கியிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil