Valentine's Day: வாணிபோஜனுடன் செம க்ளோஸில் ஐஸ்வர்யா ராஜேஸ்.. அந்த மூன்றாவது பிரபலம் யாருனு பாருங்க

சென்னை: உலகம் முழுவதும் இன்று அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பினால் தான் உலகம் இயங்கிக் கொண்டு உள்ளது என நம்பும் மனிதர்கள் காதலில் இருந்தாலும் இல்லை என்றாலும் காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு, காதலர் தின பரிசுகள் கொடுத்து மகிழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது, நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஸ், வாணி போஜன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உடன் இணைந்து காதலர் தினத்தைக் கொண்டாடி உள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்களை மூவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள்.

நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா ராஜேஸ், ஐஸ்வர்யா தத்தா இணைந்து காதலர் தினம் கொண்டாடியதை பார்த்த ரசிகர்கள் இவர்கள் மூவருக்கும் காதலர்கள் இல்லையா? இல்லை, மூவரும் ஒருவர் மீதான அன்பை வெளிப்படுத்த காதலர் தினத்தை இணைந்து கொண்டாடி உள்ளார்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Aishwaryaa Dutta Aishwarya Rajesh Vani Bhojan Valentine s Day 2025 2025

அண்மையில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாஸ் ஹிட் அடித்த படம், மதகஜராஜா. இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், சுந்தர் சி, பிரபல நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி கொடுத்தார். இதில் வாணி போஜன், ஐஸ்வர்யா ராஜேஸ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது.

காதலர் தினம்: இதனைப் பார்த்த ரசிகர்கள், இவர்கள் மூவரும் சுந்தர் சி படத்தில் நடிக்கவில்லை. ஆனாலும் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள் என்றால், மூவரும் சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்களோ என்ற கேள்வியை முன் வைத்து வந்தனர். இப்போது காதலர் தினத்தை மூவரும் இணைந்து கொண்டாடியுள்ளது தொடர்பான புகைப்படங்களைப் பார்த்த, ரசிகர்கள், அவர்கள் மூவரும் அவர்கள் மூவருக்கும் இடையிலான அன்பினை வெளிப்படுத்தவே, காதலர் தினத்தை இணைந்து கொண்டாடி உள்ளார்கள் என பேசி வருகிறார்கள்.

Aishwaryaa Dutta Aishwarya Rajesh Vani Bhojan Valentine s Day 2025 2025

ஐஸ்வர்யா ராஜேஸ்: அதேபோல் அவர்கள் மூவரும் இணைந்து காதலர் தினத்தைக் கொண்டாடிய புகைப்படத்தை முதலில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது, நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ்தான். அவரின் இன்ஸ்டகிராம் பதிவினை, வாணி போஜனும், ஐஸ்வர்யா தத்தாவும் தங்களது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளனர். இதில் வாணி போஜன் காதலர் தினத்தை எனது க்யூட்டீஸ் உடன் கொண்டாடினேன் என தெரிவித்துள்ளார். அதேபோல் ஐஸ்வர்யா தத்தா மை கேர்ள்ஸ் என கேப்ஷனிட்டு பகிர்ந்துள்ளார். அவர்களின் காதலர் தின கொண்டாட்டம் குறித்த பதிவுகள் குறித்த பேச்சுதான் இணையத்தில் சூடுபிடித்துள்ளது. இவர்கள் மூவரும் இணைந்து விரைவில் படத்தில் நடிக்கவுள்ளனர் என கூறப்படுகிறது. இதில் ஐஸ்வர்யா ராஜேஸ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஏற்கனவே ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X