»   »  மீண்டும் ஹாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய்

மீண்டும் ஹாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய்

By Staff
Subscribe to Oneindia Tamil

அடுத்து ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமாகியுள்ளார்.

என்னதான் உலக அழகி என்றாலும் சினிமாவில் ஜெயிப்பதற்கு ஐஸ்வர்யா ராய் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை. தொடக்கத்தில் இருவரில்ஆரம்பித்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வி. ஹம் தில் தே சுக்கே சனம் படம்தான் அவரைக் காப்பாற்றியது.

சல்மான்கானுடன் நடித்த இந்தப் படம் அவரது மார்க்கெட்டை உயர்த்தியது என்றாலும் வேறு ஒரு சிக்கலும் வந்து சேர்ந்தது. சல்மான்கான்காதல் தொல்லைதான் அது.

ஆரம்பத்தில் ஐஸ்வர்யாவுக்கு சம்மதம் இருந்தாலும், பின்பு சல்மான்கானின் டார்ச்சர் தாளமுடியாமல் விலகிப் போகத் தொடங்கினார். (ஒருமுஸ்லீமை காதல் செய்தால் உன் முகத்தில் ஆசிட் ஊற்றுவோம் என்று சிவசேனா தொண்டர்கள் அன்புக் கட்டளை இட்டதால்தான் பிரிந்தார்என்று கூறுவோரும் உண்டு)

பின்பு விவேக் ஓபராயுடன் ஐஸ்வர்யாவின் காதல் டேக் ஆப் ஆனபோது, பாலிவுட்டில் அவரது இடம் மேலே உயர்ந்தது.

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிக்கப் போகிறார் என்று பேச்சு வந்தது. ஆனால் ஓவர் கிளாமர் காட்டச் சொன்னதால் நடிக்க மறுத்து விட்டேன்என்று ஐஸ்வர்யா கூறினார்.

ஆனாலும் ஹாலிவுட் உலகம் ஐஸ்வர்யாவை விடவில்லை. பிரைடு அண்ட் பிரிஜூடிஸ் படத்தில் நடிக்க ஓப்பந்தமானார். படம் ஹிட்.இப்போது அடுத்து ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையே நடந்த ஒரு மேட்டரை சொல்லாவிட்டால் தலை வெடித்துவிடும். இந்த அனில் அம்பானி (ரிலையன்ஸ் குரூப்) இருக்கிறாரே.அதான் முகேஸ் அம்பானியுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாரே, அவரேதான்.

இவரை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அனில்அம்பானிதான் முதலில் ஐஸ்வர்யாவிடம் இது குறித்து பேசியதாகவும், ஐஸ்வர்யாவும் ஒத்துக் கொண்டதாகவும் செய்தி காட்டுத் தீ போல்பரவியது.

பதறிப்போன ஐஸ்வர்யா உடனடியாக நிருபர்களை அழைத்து, நான் அப்படியெல்லாம் ஏதும் செய்யப் போவதில்லை. இது வழக்கம்போல்வெறும் வதந்திதான் என்று அவரது ரசிகர்கள் வயிற்றில் தேன் ஊற்றினார். (அப்போது கூட விவேக் ஓபராயைக் காதலிப்பதாகக்கூறவில்லை)

சரி, இரண்டாவது ஹாலிவுட் மேட்டருக்கு வருவோம். இந்தப் படத்தின் பெயர் விண்ட்புல். 1984ம் வருடம் போபாலில் நடந்த விஷவாயுசம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுக்கிறார்கள்.

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் சாசரி காபின்தான் இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறார். ஐஸ்வர்யா இணைத் தயாரிப்பாளர்.


ஐஸ்வர்யாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் ஐஸ்வர்யா ராயின் பெயர் ஜாஸ்மின் சிங். கதைப்படிபோபால் விஷ வாயு சம்பவம் அவரது சின்ன வயதில் நடக்கிறது. அப்போது அவர் போபாலில் வசிக்கிறார். பின்பு அமெரிக்கா சென்றுவிடுகிறார்.

அங்கு அவர் இளைஞியாக வளரும்போது, போபால் சம்பவம் அவரை வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான்படமாக வரப்போகிறது.

போபால் சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுத்தால் ஹாலிவுட் ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்விக்கு,

போபால் என்ற வார்த்தையைக் கூட அமெரிக்கர்கள் உச்சரிக்க சிரமப்படுவார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால், போபால்சம்பவங்கள் போன்று பல சம்பவங்கள் அமெரிக்காவிலும் நடந்துள்ளன. எனவே படத்தை உலகளவில் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள்.

எனது திரைப்படம் வெளிவந்தவுடன் அனைத்தும் மாறிவிடும். உணர்ச்சிகரமான ஒரு சூழ்நிலையை படம் ஏற்படுத்தி விடும் என்று சாசரிகாபின் நம்பிக்கையுடன் கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more