ஒருநாள் கூத்து இயக்குநருடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்... பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக பாலா இயக்கத்தில் நடிக்கவும் இவர் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் சூர்யா இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். இதற்கான பூஜை நேற்றைய தினம் போடப்பட்டுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். இவரது கைவசம் அரைடஜனுக்கும் அதிகமான படங்கள் உள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார்.

பாலா இயக்கத்தில் ஐஸ்வர்யா

பாலா இயக்கத்தில் ஐஸ்வர்யா

தற்போது பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்பிரைசஸ் சார்பில் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது. இந்தப் படத்திற்காக சமீபத்தில் போட்டோஷுட் நடத்தப்பட்டுள்ளது.

ஜனவரியில் படப்பிடிப்பு

ஜனவரியில் படப்பிடிப்பு

வரும் ஜனவரியில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார். அநேகமாக இவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என்று தெரிகிறது. நாச்சியார் படத்திற்கு பிறகு பாலா இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

புதிய படம்

புதிய படம்

இதனிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை தற்போது போடப்பட்டுள்ளது. ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இன்னும் டைட்டில் வெளியிடப்படாத இந்தப் படத்தை ஜோக்கர், அருவி, காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்

பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்

இது இந்த நிறுவனத்தின் 40வது படம். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள இந்தப் படத்தில் ஜித்தன் ரமேஷ், கிட்டி உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் பூஜையுடன் தற்போது துவங்கப்பட்டுள்ளது.

Recommended Video

நான் காதலித்த ஒரே நடிகர் | Actress Aishwarya Exclusive | Filmibeat Tamil
நடிப்பால் கவரும் ஐஸ்வர்யா

நடிப்பால் கவரும் ஐஸ்வர்யா

தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஹீரோயினாக ஒரு வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் பல்வேறு கேரக்டர்களில் நடித்து வருகிறார். அதிலும் தனக்கு முக்கியத்துவம் இருந்தால் உடனடியாக ஓகே செய்கிறார். இந்நிலையில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இந்தப் படத்தில் அவர் இணைந்திருப்பது சிறப்பானது.

ரசிர்களுக்கு இனிப்பான செய்தி

ரசிர்களுக்கு இனிப்பான செய்தி

மேலும் பாலா இயக்கத்திலும் இவர் இணைந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகவும் இனிப்பான செய்தி. நன்றாக நடிக்காதவர்களையே சிறப்பாக நடிக்க வைக்கும் வல்லமை படைத்தவர் பாலா. அவரது இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் தன்னை மெருகேற்றிக் கொள்ள முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X