»   »  காக்கா முட்டை... கடுப்பில் கறுப்பு ஐஸ்வர்யா ராஜேஸ்!

காக்கா முட்டை... கடுப்பில் கறுப்பு ஐஸ்வர்யா ராஜேஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீண்ட நாட்களுக்கு முன்னர் நடித்த ‘காக்கா முட்டை' படம் ரிலீஸ் ஆக உள்ளதால் அதில் நடித்த நடுத்தர வயது பெண்ணாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஸ் கடுப்பாகியுள்ளாராம்.

அவர்களும் இவர்களும்', ‘சட்டப்படி குற்றம்', ‘விளையாட வா' போன்ற படங்களில் நடித்திருந்தாலும், ‘அட்டகத்தி' படத்தின் மூலம் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இப்படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த ‘ரம்மி', ‘பண்ணையாரும் பத்மினியும்' படங்களின் மூலம் புகழ்பெற்றார்.

காக்கா முட்டை

காக்கா முட்டை

இதற்கிடையில் 2 வருடங்களுக்கு முன்பு நடிகர் தனுசும் இயக்குனர் வெற்றிமாறனும் இணைந்து தயாரித்த ‘காக்கா முட்டை' என்ற படத்தில் நடித்திருந்தார்.

கறுப்பு கூடவே குண்டு

கறுப்பு கூடவே குண்டு

அச்சமயத்தில் இவரது கைவசம் படங்கள் எதுவும் இல்லை. எனவே கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்திக் கொண்டார். இதில் 30 வயதான சேரி பெண்ணாக நடித்த ஐஸ்வர்யா ஆனால், இப்படத்தின் கேரக்டருக்காக உடல் குண்டாகவும், கறுப்பாகவும் பெண்ணாக நடித்திருந்தார்.

இமேஜ் பாதிக்குமோ?

இமேஜ் பாதிக்குமோ?

இந்நிலையில் ‘காக்கா முட்டை' படத்தை வெளியிட ஏற்பாடுகள் தற்போது நடந்துக் கொண்டிருப்பதால், தன்னுடைய இமேஜ் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற கவலையில் இருக்கிறார்.

பிஸி ஐஸ்வர்யா

பிஸி ஐஸ்வர்யா

தற்போது ‘இடம் பொருள் ஏவல்', ‘குற்றமும் தண்டனையும்', ‘தீபாவளி துப்பாக்கி' உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

என்ன ஒரு கவலை

என்ன ஒரு கவலை

எனவே, தற்போது ‘காக்கா முட்டை' வெளிவந்தால், தன் கலர் அழகு பற்றி கேள்வி எழுமே என்று ஏக கடுப்பில் இருக்கிறார் அம்மணி. தான் நடித்த படங்கள் வெளிவராதா என்று கவலை கொள்ளும் நடிகைகளில் மத்தியில் இவரது கவலை இப்படியாக இருக்கிறது.

தனுஷின் ‘காக்கா முட்டை' யை நினைத்து கடுப்பாகும் ‘கறுப்பு' ஐஸ்வர்யா!

English summary
Heroine Aiswarya Rajesh worry about her Kakka Muttai film release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil