»   »  அஜீத் ஆழ்வார்!

அஜீத் ஆழ்வார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அல்டிமேட் ஸ்டார் அஜீத் அடுத்த படத்துக்குத் தயாராகி விட்டார்.

தொடர்ந்து சொதப்பல் படங்களாகக் கொடுத்து வந்த அஜீத் கெட்ட நேரத்தைத் தாண்டிபரமசிவன், திருப்பதி என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்து நிமிர்ந்து நின்றார்.

அந்த நேரம் பார்த்து பாலாவுடன் பிரச்சினை, ஆள் வைத்து மிரட்டப்பட்டார் எனஏகப்பட்ட சர்ச்சைகள்.

இந்த நொம்பலத்திலிருந்து அஜீத் மீண்டு அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார்.அஜீத் நடித்த புதிய படத்தின் பெயர் ஆழ்வார்.

உடனே பக்திப் படம் என்று நினைத்து விடாதீர்கள். அட்டகாசமான காதல் கதையாம்.

அஜீத்துடன் ஜோடி போடப் போவது அசின். படத்தை இயக்கப் போவதுஎஸ்.ஜே.சூர்யாவிடம் உதவியாளராக இருந்த செல்லா.

இளமைத் துடிப்புடன் இசைமயக்கப் போகிறவர் யுவன் ஷங்கர் ராஜா.

எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் என்பதால் படத்தை இளமைத் துள்ளலுடன்படமாக்கப் போகிறார் செல்லா. அஜீத்துக்கு இந்தப் படம் முக்கியம் என்பதால்படத்துக்காக முழுமையாக கால்ஷீட் கொடுத்துள்ளாராம் அஜீத்.

படத்தை விரைவில் தொடங்கி தீபாவளிக்கு களத்தில் இறக்கவுள்ளனர்.

ஆழ்வார் அஜீத்துக்கு நிம்மதி தரட்டும்!

Read more about: ajiths next film aalwar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil