அஜீத்தை நேரில் பார்க்க ஆசைப்படும் நஸ்ரியா
அஜீத் என்னுடைய மனதிற்கு பிடித்த ஹீரோ என்று நஸ்ரியா தெரிவித்துள்ளார். அவருடன் நடிக்க முடியாவிட்டாலும் ஒருமுறையாவது நேரில் பார்த்து பேச ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் விஜய் விருது விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிறந்த அறிமுக நடிகை விருது பெற்றார் நஸ்ரியா. அவரிடம் பிடித்த ஹீரோ யார் என்று கேட்டதற்கு, அஜீத் என்று கூறினார்.

ஜோடி சேர ஆசை
நஸ்ரியாவுக்கு, அஜீத்துடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும் என்ற கனவு உள்ளதாம். அதற்காக, அவர் தீவிரமாக முயற்சித்து வந்துள்ளார்.

திருமணம் நிச்சயம்
மலையாள நடிகர் பஹத் பாசிலுடன் நஸ்ரியா காதலில் விழுந்ததை அடுத்து, அவர்களின் திருமணமும் முடிவாகி விட்டது. இதனால், நஸ்ரியாவின் அஜீத்துடன் நடிக்கும் கனவு, நனவாகவில்லை.

நேரில் பார்க்க ஆசை
ஆனாலும், அஜீத்தை, ஒருமுறையாவது நேரில் சந்தித்து பேச வேண்டும் என, ஆசைப்படுகிறார், நஸ்ரியா. இதனை விருது விழா மேடையிலும் தெரிவித்துள்ளார் நஸ்ரியா.

ரசிகையாக காத்திருக்கிறேன்
ஒரு ரசிகையாக, அஜீத்துடன் மனம் விட்டு பேசும் நேரத்துக்காக காத்திருக்கிறார். இந்த ரசிகையின் ஆசையை நிறைவேற்றுவாரா அஜீத்.


Click it and Unblock the Notifications











