ரசிகர்கள்னா அது தமிழ் ரசிகர்கள் தான்: நீத்து சந்திரா 'ஐஸ்'
சென்னை: தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ அஜீத் குமார் என்று நீத்து சந்திரா தெரிவித்துள்ளார்.
யாவரும் நலம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பீகார் அழகி நீத்து சந்திரா. அவர் தமிழகத்தில் இன்னும் பெரிய அளவில் பெயர் எடுக்கவில்லை. இந்நிலையில் அவர் அமீரின் ஆதிபகவன் மற்றும் சேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் வெளியான ஆதிபகவன் தலைப்பு பிரச்சனையில் சிக்கி பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீத்து தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ பற்றி தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்னா அது தமிழ் ரசிகர்கள் தான்
ரசிகர்கள் என்றால் அது தமிழ் ரசிகர்கள் தான். ரஜினி சாரா இருக்கட்டும், கமல் சாரா இருக்கட்டும் அல்லது சூர்யா, விக்ரம், விஜயாக இருக்கட்டும் அவர்களை நேசிக்கிறார்கள். தற்போது எனக்கும் ரவிக்காகவும் படத்தை பார்த்துள்ளனர் என்று நீத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அஜீத் தான் ரொம்ப பிடிக்கும்
ட்வீட்டில் அஜீத் குமாரை விட்டுவிட்டீர்களே என்று கேட்டதற்கு, எனக்கு உங்கள் அனைவரையும் பிடிக்கும். நான் அஜீத் சாருடன் பணியாற்ற காத்துக் கொண்டிருக்கிறேன். அனைவரையும் விட அவர் தான் எனக்கு மிகவும் பிடித்தவர். விரைவில் அவருக்கு ஜோடியாக சோலோ ஹீரோயினாக நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் நீத்து.

மங்காத்தாவில் நீக்கப்பட்ட நீத்து
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தாவில் நீத்து சந்திரா நடிப்பதாக இருந்தார். ஆனால் கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் பிரச்சனையில் சிக்கியதால் படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications











