விஜய்யுடன் ஒரு முறை.. அஜித்துடன் பல முறை.. விடாமுயற்சி படத்தில் அந்த விஷயத்தில் த்ரிஷா தாராளம்!

சென்னை: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுடன் சமீப காலமாக நடித்து மாஸ் காட்டி வருகிறார் நடிகை த்ரிஷா. ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்த த்ரிஷா சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனதில் இருந்து விடாமுயற்சி படம் வரை இத்தனை ஆண்டுகள் ஆகியும் இளமை மாறாமல் அதே பொலிவுடன் எப்படித்தான் இப்படி அழகாக இருக்கிறாரோ என்கிற கேள்வியை ரசிகர்கள் படம் முழுக்க எழுப்பி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஐடென்டிட்டி படத்தில் ஃபேஸ் பிளைண்ட்னஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்த த்ரிஷா, அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தில் அவரது மனைவியாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார்.

vidamuyarchi ajith kumar trisha

த்ரிஷா அஜித்தை பிரிந்து இன்னொருவருடன் வாழப்போவதாக சொல்ல ஆரம்பித்ததில் இருந்து அஜித் ரசிகர்கள் தியேட்டரில் அவரை திட்ட ஆரம்பித்துவிட்டனர். ரசிகர்களை கூலாக்க வேண்டும் என்பதற்காக கடைசியில் சில முத்தக் காட்சிகளை இஷ்டத்துக்கு மகிழ் திருமேனி வைத்துள்ளார்.

லியோ லிப் லாக்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் படத்தின் தழுவலாக உருவாகிய விஜய்யின் லியோ படத்திலும் த்ரிஷா தான் ஹீரோயின். அந்த படத்தில் விஜய்க்கு அவர் கொடுக்கும் லிப் லாக் முத்தக் காட்சி ஒட்டுமொத்த தியேட்டரையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியும் பக்காவாக இருந்தது. இந்நிலையில், விடாமுயற்சி படத்திலும் முத்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அஜித்துக்கு பல முறை முத்தம்: க்யூட்டாக முட்டிப் போட்டு அஜித் மோதிரம் மாட்டிவிடும் காட்சிகள் மற்றும் த்ரிஷாவின் பிறந்தநாளை கண்டுபிடிக்க அவர் செய்யும் ஒரு விஷயம் (பல பெண்கள் இனிமேல் காதலர்களை அப்படி தொல்லை செய்ய ஆரம்பிக்கலாம்) என ரொமான்ஸ் போர்ஷனில் யங் லுக்கில் அஜித் குமாருக்கும் த்ரிஷாவுக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் ரொம்பவே ரசிக்க வைத்தன. மேலும், த்ரிஷா மற்றும் அஜித் இருவரும் மாறி மாறி முத்த மழை பொழிந்துக் கொள்ளும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் ரசிகர்களை சற்றே ஆசுவாசப்படுத்தின.

லிப் லாக் இல்லை: கன்னத்திலும், நெற்றியிலும் மாறி மாறி இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்டாலும் லிப் லாக் கிஸ் அடித்துக் கொள்ளவில்லை. லியோவை தொடர்ந்து விடாமுயற்சி படத்திலும் த்ரிஷா லிப் கிஸ் அடிக்கப் போகிறாரா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அது சற்று ஏமாற்றத்தை தந்தாலும், அஜித் குமார் ரசிகர்கள் ஹேப்பி தான். குட் பேட் அக்லி படத்திலும் இதே ஜோடி இதை விட சிறப்பாக ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X