சமையலிலும் 'தல' கிங்!
நடிகர் அஜீத்குமார் ருசியாக பிரியாணி செய்வார் என்பது அனைவருக்கும் தெரியும். ஷூட்டிங் ஸ்பாட்டில் தன் கையால் மணக்க, மணக்க பிரியாணி செய்து படக்குழுவை அசத்துவார். பல நடிகைகள் அவரது பிரியாணிக்கு அடிமையாகிவிட்டனர் என்று கூட சொல்லலாம். அவ்வளவு அருமையாக சமைப்பார் அஜீத்.
அவர் தனது குடும்பத்துடன் பெரிய ஹோட்டல்களுக்கு சாப்பிடச் சென்றால் அங்கு என்ன சாப்பிடுகிறார்களோ அதை வீட்டுக்கு வந்தவுடனே சமைத்துப் பார்ப்பாராம். சரியாக வரவில்லை என்றால் உடனே அந்த ஷெப்புக்கு போன் போட்டு கேட்பாராம். அஜீத் கேட்டால் சொல்லாமலா இருப்பார்கள். ஷெப்பின் அறிவுரைப்படி அந்த உணவு வகையை செய்து முடித்த பிறகு தான் தல நிம்மதியாக இருப்பாராம்.
பெண்களே சமைக்க எரிச்சல் படுகிற இந்த காலத்தில் ஓய்வு நேரங்களில் அஜீத் சமைத்து அனைவரையும் அசத்துவது பாராட்ட வேண்டிய விஷயம் தான்.
அவர் ஒரு பக்கம் சமைத்துக் கொண்டிருக்க மறுபக்கம் அவரது மனைவி ஷாலினி தங்கள் செல்ல மகள் அனோஷ்காவை விதவிதமாகப் போட்டோ எடுத்து ரசிக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications
