Ajithkumar: குட் பேட் அக்லி படத்தில் இவ்வளவு கெட்ட வார்த்தையா? கத்திரிப்போட்டு தூக்கிய தணிக்கை குழு!

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டிரைலர் வெளியாகி 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ள நிலையில் படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி உள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி 6ந் தேதி வெளியானது.
லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா என பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற Sawadeeka பாடல் பட்டிதொட்டி எங்கும் இளசுககளை ஆட்டம் போட வைத்தது. ஆனால், 'விடாமுயற்சி' படத்தில் அஜித்தின் மாஸ் காட்சிகள் இல்லாதது அஜித் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. தற்போது, அனைவரின் எதிர்பார்ப்பும் 'குட் பேட் அக்லி' படத்தின் மீதே உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால், தரமான ஒரு படத்தை நிச்சயம் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Ajith kumar good bad ugly censor

கெட்ட வார்த்தை நீக்கம்: குட் பேட் அக்லி படம் 10ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் தணிக்கை குழுவின் சான்றிதழ் வெளியாகி உள்ளது. இப்படத்தை 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் வகையில் 'யுஏ 16+' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் நீளம் 2 மணி நேரம் 20 நிமிடம் என்றும், படத்தில் பல இடத்தில் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அவை நீக்கப்பட்டுள்ளது என்றும், சில வார்த்தைகள் 'மியூட்' செய்யப்பட்டுள்ளது என்றும் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது. இத்திரைப்படத்தில் பிரசன்னா, பிரியா வாரியர், சிம்ரன், ஜாக்கி ஷரோஃப், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

Ajith kumar good bad ugly censor

ஆதிக் ரவிச்சந்திரன்: இப்படத்தின் ப்ரோமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆதிக் ரவிச்சந்திரன், முதன் முதலில் நான் அஜித் சாரை பார்த்து கதை சொல்ல சென்ற போது மனதிற்குள் பயம் இருந்தது. சார், கதையை கேட்டுவிட்டு பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று, மனதிற்குள் பயம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால், அவர் கதையை கேட்டு விட்டு ஓகே சொல்லிவிட்டார். அவர் எனக்கு ஒகே சொன்ன போது நான் பெரிய இயக்குநர் இல்லை. அஜித் சார் என் சக்சசைப் பார்த்து வாய்ப்பு கொடுக்கவில்லை. ஒருத்தன் இந்த தொழிலில் கஷ்டப்படுகிறான், அவனுக்கு ஒரு நல்ல பிளாட்பார்ம் அமைந்து கொடுக்க வேண்டும் என நினைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்தார் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், எனக்கு எப்போதுமே வெகுஜன மக்களை கவரும் வகையில் படம் எடுக்க வேண்டும் என்பது தான் என் ஆசை, அதற்கு என்ன தேவையோ அது தான் என் திரைக்கதையில் இருக்கும். குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் சார் ரொம்ப ஹாப்பி, படத்தின் ஆரம்பத்தில் எனக்கு எவ்வளவு சப்போர்ட் கொடுத்தாரோ, அதே அளவுக்கு தான் இப்பவும். என்னை ரொம்ப கன்பர்டபுலாக பார்த்துக்கொண்டார். இயக்குநருக்கு என் தேவையோ, அதை செய்து கொடுங்க என தயாரிப்பாளரிடம் சொன்னார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X