வீரம் படத்துல நடிச்ச சின்ன பாப்பாவா இது.. இப்படி திருமண கோலத்தில் சும்மா சூப்பரா ஜொலிக்கிறாரே!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார், தமன்னா நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான வீரம் படத்தில் சிறுமியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த குழந்தை நட்சத்திரம் யுவினா பார்த்தவி 16 வயது இளம்பெண்ணாக மாறிய நிலையில், திருமண கோலத்தில் சமீபத்தில் அவர் பிரைடல் மேக்கப் போட்டுக் கொண்டு நடத்திய போட்டோஷூட் மற்றும் மேக்கப் போடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றன.
தமிழ் சினிமாவில் ஸ்ரீதேவி காலத்தில் இருந்தே குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் டாப் ஹீரோயின்களாக மாறி ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர். கமல்ஹாசனும் குழந்தை நட்சத்திரமாக நடித்து தான் இன்று விண்வெளி நாயகனாக மாறியிருக்கிறார்.

நடிகைகள் மீனா, ஷாலினி, ஷாமிலி, அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலரும் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஹீரோயின்களாக ஆனவர்கள் தான். அந்த வரிசையில் அஜித்துடன் வீரம் படத்தில் அமுல் பேபியாக க்யூட்டாக நடித்த யுவினா பார்த்தவி லேட்டஸ்ட்டாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போஸ்ட்டுகள் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளன.
தேவயானி படத்தில் அறிமுகம்: கடந்த 2013ம் ஆண்டு தேவயானி மற்றும் ராஜகுமரன் நடிப்பில் வெளியான திருமதி தமிழ் படத்தில் தான் யுவினா பார்த்தவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தான் 2014ம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் நடித்து பிரபலமானார்.
வீரம் பாப்பா: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா, சந்தானம், தம்பி ராமையா, விதார்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினா அதே ஆண்டு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மஞ்சப்பை, அதிதி, மேகா, அரண்மனை, கத்தி, அபிமன்யு, ஜெய்ஹிந்த் 2, மாசு என்கிற மாசிலாமணி, ஸ்ட்ராபெர்ரி, சர்க்கார், மதகஜ ராஜா மற்றும் கடைசியாக ரவி மோகன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சைரன் படம் வரை பல படங்களில் நடித்துள்ளார். மத கஜ ராஜா படத்தில் நடிக்கும் போது குழந்தையாக இருந்த யுவினா அந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் போது 16 வயது பருவப் பெண்ணாக படத்தை பார்த்தது எல்லாம் வேறலெவல் சம்பவம்.
பிரைடல் லுக்கில் அசத்தல்: ஏஞ்சல் ஆண்டோனட் கேசியாவிடம் பிரைடல் மேக்கப் போடச் சொல்லி யுவினா பார்த்தவி தன்னை ஒப்படைக்க அவரை அப்படியே அழகான கல்யாணப் பொண்ணாகவே அந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மாற்றிக் காட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளனர். மேலும், பிரைடல் லுக்கில் வித விதமான போட்டோஷூட்களை நடத்தி நானும் ஹீரோயினாக ரெடி என்பது போலவே யுவினா அறிமுக இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கு தூது விடுத்துள்ளார். அனிகா சுரேந்திரனை போல சீக்கிரமே இவரும் சினிமாவில் ஹீரோயினாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், சில விளம்பரப் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் யுவினா என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. செம க்யூட்டாக இருக்கும் யுவினாவை ஏகப்பட்ட இளைஞர்களும் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











