விஜய் தான் சூப்பர் ஹீரோ... உருகி உருகி புகழ்ந்த அஜித் பட நடிகை
சென்னை : ஏற்கனவே விஜய் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். அவரை பற்றிய தகவல்களையும் கொண்டாடி வருகின்றனர். விஜய் பற்றிய எந்த தகவல், ஃபோட்டோ, படங்களின் அப்டேட் வெளி வந்தாலும் அதை வைரலாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் அஜித் பட நடிகையே விஜய்யை புகழ்ந்திருப்பதால் அதை ஸ்பெஷலாக கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். அதிலும் விஜய்யை சூப்பர் ஹீரோ என புகழ்ந்துள்ளார்.

விஜய் சூப்பர் ஹீரோ
அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருந்தார் பார்வதி நாயர். இவர் தான் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய்யை சூப்பர் ஹீரோ என புகழ்ந்துள்ளார்.

இந்தியிலும் அறிமுகம்
என்னை அறிந்தால் படத்தின் மூலம் தான் பார்வதி நாயர் தமிழுக்கு நடிக்க வந்தார். இந்த படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர். அதற்கு பிறகு பல தமிழ், மலையாளம் படங்கள் பலவற்றிலும் நடித்தார். பல வெற்றி படங்களில் நடித்த பார்வதி நாயர், ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ள 83 படத்தின் மூலம் இந்தியிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

யார் வந்து காப்பாத்தனும்
சமீபத்தில் பேட்டி ஒன்றில், நீங்கள் மிகவும் ஆபத்தான சூழலில் இருக்கும் போது உங்களை எந்த ஹீரோ வந்து காப்பாற்ற வேண்டும் என விரும்புவீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு உடனடியாக பதிலளித்த பார்வதி நாயர், விஜய் சாரை தான் தேர்வு செய்வேன். ஒருவரை காப்பாற்ற வேண்டுமானால் அவர் தான் சரியான ஹீரோ. அவர் தான் சூப்பர் ஹீரோ இமேஜ் உடையவர் என்றார்.

ஆலம்பனாவில் பார்வதி
பார்வதி நாயர் தற்போது ஏராளமான படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். தற்போது ஆலம்பனா படத்தில் வைபவ் உடன் நடித்து வருகிறார். இந்த படத்தை பாரி கே விஜய் இயக்கி வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டது.

கவர்ச்சி ஃபோட்டோஷுட்
அது மட்டுமல்ல கிடைக்கும் நேரத்தில் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ரசிரக்களின் மனங்களை சுண்டி இழுத்து வருகிறார் பார்வதி நாயர்.


Click it and Unblock the Notifications











