மகள் வயது இருக்கும்.. அந்த நடிகையோடு ரொமான்ஸ் செய்கிறாரா அஜித்?.. இது என்ன புதுசு?

சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடந்த வருடத்தில் வெளியான இரண்டு படங்களுமே சுமார் வரவேற்பை பெற்றன. ஆனால் இரண்டு படங்களுமே தோல்வியடைந்து நஷ்டம் ஏற்பட்டதால்; அவரது அடுத்த படத்தை தயாரிப்பதற்கு யாரும் முன்வரவில்லை என்றும் அதனால் அவரே படத்தை தயாரிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஏகே 64 பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அது அனைவருக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அஜித் ஒரு வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கக்கூடியவர். ஆனால் கடந்த வருடத்தில் மட்டும் இரண்டு படங்களில் நடித்தார். கார் ரேஸில் கலந்துகொண்டதால்; அதற்குள் தனக்கு இருக்கும் கமிட்மென்ட்டுகளை முடிப்பதற்காகத்தான் அவர் அப்படி செய்தார். முதலில் நடித்த விடாமுயற்சி படம் படுதோல்வியை சந்திக்க; அடுத்ததாக நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களை மட்டும்தான் திருப்திப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith s AK64 Kayadu Lohar Likely to Replace Sreeleela in Adhik Ravichandran s Film
Photo Credit:

அடுத்த படமும் ஆதிக்குடன்: குட் பேட் அக்லி படத்தில் பணியாற்றியபோது ஆதிக் ரவிச்சந்திரனின் வொர்க்கிங் ஸ்டைல் பிடித்துவிட்டதால்; அவரை அஜித் தனது குட் புக்கில் சேர்த்துவிட்டாராம். எனவே சிவா, ஹெச்.வினோத்துடன் எப்படி வரிசையாக படங்களில் பணியாற்றினாரோ அதேபோல் இவருடனும் பணியாற்ற முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதன் காரணமாகத்தான் அடுத்த படத்தையும் அவருக்கே கொடுத்திருக்கிறார்.

Also Read
அனைத்துக்கும் சேரன் தகுதியானவர்.. அந்தத் திருமணத்தில்.. இரா. சரவணன் நெகிழ்ச்சி
அனைத்துக்கும் சேரன் தகுதியானவர்.. அந்தத் திருமணத்தில்.. இரா. சரவணன் நெகிழ்ச்சி

தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லையா?: ஆதிக் சொன்ன கதைக்கு அஜித் ஓகே சொல்லிவிட்டாலும்; அவரை வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லை என்று சமீப நாட்களாக தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. முக்கியமாக குட் பேட் அக்லி திரைப்படத்தால் மொத்தம் 40 கோடி ரூபாய் நஷ்டம் என்று தயாரிப்பாளர் கேயாரும் ஒரு பேட்டியில் கூறினார். அதுமட்டுமின்றி அஜித் சம்பளமாக 180 கோடி கேட்கிறார் என்றும்; அதனாலும் தயாரிக்க யோசிக்கிறார்கள் எனவும் ஒரு பேச்சு ஓடுகிறது.

அஜித்தே தயாரிப்பாளர்?: இதையெல்லாம் பார்த்த அஜித்தோ; தானே தயாரிக்க முன் வந்திருப்பதாகவும்; இணைந்து தயாரிக்கா இன்னொரு தயாரிப்பாளரை பிடிக்கும் வேலைகள் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில்கூட கோவையை சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தெரிகிறது. எனவே விரைவில் ஏகே 64 பற்றிய அறிவிப்பு வரலாம் என்று தெரிகிறது. இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

என்ன தகவல்?: அதாவது இப்படத்தில் முதலில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிப்பார் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது முடிவை மாற்றிய ஆதிக்; சென்சேஷனலாக இருக்கும் கயாடு லோஹரை ஃபிக்ஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். அதற்கான பேச்சுவார்த்தையும் தொடங்கிவிட்டதாம். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருகிறது. அஜித்துக்கு 55 வயது ஆகிறது. கயாடுவுக்கோ 26தான் ஆகிறது. கிட்டத்தட்ட மகள் வயது நடிகையுடன் அஜித் ரொமான்ஸ் செய்வாரா அல்லது படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இல்லாமல் வேறு மாதிரி முக்கியத்துவத்தை கயாடுவுக்கு ஆதிக் கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X