எப்படிலாம் யோசிக்கிறாங்க.. காதலரை பிரிய வாய்ப்புக் கொடுத்ததாம்.. லாக்டவுனுக்கு பிரபல நடிகை நன்றி!

By

சென்னை: காதலரை பிரிய வாய்ப்புக் கிடைத்ததால் லாக்டவுனுக்கு நன்றி சொல்லி இருக்கிறார் நடிகை ஒருவர்.

Recommended Video

ACTION MOVIE REVIEW | POSTER PAKIRI | FILMIBEAT TAMIL

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள லாக்டவுனால் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சினிமா துறையிலும் பலர் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

 லாக்டவுனுக்கு நன்றி

லாக்டவுனுக்கு நன்றி

இதனால் கொரோனாவையும் லாக்டவுனையும் கடுமையாக சபித்து வரும் நிலையில் நடிகை ஒருவர் லாக்டவுனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்‌ஸ் பாண்டியன் மூலம், சினிமாவில் அறிமுகமானவர் ஆகன்ஷா புரி. இதில் சந்தானத்தின் தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தார். சுராஜ் இயக்கி இருந்த இந்தப் படம், 2013 ஆம் ஆண்டு வெளியானது.

 பார்வதி தேவி

பார்வதி தேவி

அடுத்து மம்மூட்டி, முகேஷ் நடித்த பிரைஸ் த லார்ட் என்ற மலையாளப் படத்திலும் சாம்ராஜ்யம், அமர் அக்பர் அந்தோணி படங்களிலும் ஹீரோயினாக நடித்தார். பின்னர், லாட் என்ற கன்னட படத்தில் நடித்த ஆகன்ஷா, தமிழில் விஷாலின் ஆக்‌ஷன் படத்தில் நடித்திருந்தார். சன் டி.வியில் ஒளிபரப்பான விநாயகர் என்ற பக்தி தொடரில் பார்வதி தேவியாகவும் நடித்திருந்தார்.

 கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

இந்தியிலும் நடித்துள்ள இவர், இந்தி டிவி நடிகர், பரஸ் சப்ராவை காதலித்து வந்தார். இருவரும் இந்த வருடம் திருமணம் செய்துகொள்ள இருந்தனர். இந்நிலையில், பரஸ், பிக்பாஸ் வீட்டில் இருந்த மஹிரா சர்மா என்பவரை காதலிக்கத் தொடங்கினார். இதன் காரணமாக, ஆகன்ஷாவுக்கும் பரஸுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தங்களது மூன்று வருடக் காதலை, திடீரென முறித்துக் கொண்டனர்.

 டாட்டூவை மாற்றினார்

டாட்டூவை மாற்றினார்

பரஸ், காதல் உச்சத்தில் இருந்தபோது, தன் கையில் ஆகன்ஷாவின் பெயரை பச்சைக் குத்தியிருந்தார். காதல் முறிந்ததை அடுத்து டாட்டூவை 'பிக்பாஸ் கண்'ணாக மாற்றினார். ஆகன்ஷாவும் பரஸ் பெயரை தனது கையில் டாட்டூ குத்தியிருந்தார். பின்னர் அவரும் அதை மாற்றி அமைத்தார். இந்நிலையில் ஆகன்ஷா கூறியிருப்பதாவது:

 கஷ்டமான காலம்

கஷ்டமான காலம்

கடந்த செப்டம்பரில் இருந்து கஷ்டமான காலம் எனக்கு. 12 மணி நேரம் வேலை செய்து கொண்டிருந்தேன். என் தனிப்பட்ட வாழ்க்கையும் நெருக்கடியை தந்தது. இப்போது நிம்மதியாக உணர்கிறேன். இந்த லாக்டவுன் கடந்த கால விஷயங்களில் இருந்து என்னை மாற்றி இருக்கிறது. என் குடும்பத்துடன் இனிமையாக நேரத்தை செலவிட உதவி இருக்கிறது.

 தவறான இடத்தில்

தவறான இடத்தில்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் (பரஸ்-மஹிரா காதல்) நான் சில விஷயங்களை அறிந்து கொண்டதற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் நிச்சயம் தவறான இடத்தில் இருந்தேன். அதனால் உடனடியாக விலகிச் சென்றேன். இப்போது நடக்க இருக்கும் பிக்பாஸ் 14 நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X