அக்ஷரா ஹாஸன் அந்தரங்க போட்டோ லீக்: பிரபல நடிகையின் மகனிடம் விசாரணை?
மும்பை: நடிகை அக்ஷரா ஹாஸனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக நடிகை ரதியின் மகன் தனுஜிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸனின் அந்தரங்க புகைப்படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியானது.
அந்த புகைப்படங்கள் கசிந்தது குறித்து அக்ஷரா மும்பை போலீசில் புகார் அளித்தார்.

தனுஜ்
அக்ஷரா நடிகை ரதி அக்னிஹோத்ரியின் மகன் தனுஜ் விர்வானியை முன்பு காதலித்தார். அவரிடம் மட்டும் அளித்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் கசிந்தவை. அந்து புகைப்படங்களை அக்ஷரா கடந்த 2013ம் ஆண்டு தனது செல்போனில் இருந்து தனுஜுக்கு அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இல்லை
அக்ஷரா அனுப்பி வைத்த புகைப்படங்களை 2013ம் ஆண்டே தனது செல்போனில் இருந்து நீக்கிவிட்டதாகவும், தற்போது புகைப்படங்கள் வெளியானதற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தனுஜ் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

விசாரணை
அக்ஷராவின் புகைப்படங்கள் வெளியான விவகாரம் தொடர்பாக வெர்சோவா போலீசார் தனுஜிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு மட்டும் அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள் எப்படி ஆன்லைனில் கசிந்தது என்று விசாரணை நடத்தப்பட உள்ளதாம். அந்த புகைப்படங்களை தனுஜை தவிர வேறு யாருக்கும் அனுப்பவில்லை என்கிறார் அக்ஷரா.

ட்விட்டர்
தனது அந்தரங்க புகைப்படங்கள் இப்படி சமூக வலைதளங்களில் வெளியானதை பார்த்து மிகவும் வேதனை அடைந்ததாக அக்ஷரா ஹாஸன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். கமல், ரஜினிகாந்துடன் சேர்ந்து பல படங்களில் நடித்த பிரபல நடிகை ரதியின் மகன் தான் இந்த தனுஜ் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











