எல்லாமே பொய்.. என்னையும் என் குடும்பத்தோட பெயரையும் தப்பா யூஸ் பண்றாங்க.. அக்‌ஷரா ஹாசன் பகீர்!

சென்னை: நடிகையும் நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளுமான அக்‌ஷரா ஹாசன் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தன்னை பற்றி வரும் தகவல்கள் முழுக்க முழுக்க பொய் எனக் கூறியிருக்கிறார். மேலும், தனது குடும்பத்தின் பெயரையும் ஒரு குறிப்பிட்ட நபர் இந்த விவகாரத்தில் கோர்த்து விடப் பார்ப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்றும் இயக்குநர் மணிரத்னம் கமல்ஹாசன், சிம்புவின் உழைப்பை ரொம்பவே வீணடித்து விட்டார் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், இன்னொரு பிரச்னையை அக்‌ஷரா ஹாசன் அட்ரெஸ் செய்துள்ளார்.

Akshara Haasan post an alert message and clear the air she never started any production company
Photo Credit:

நடிகை ஸ்ருதிஹாசன் சலார், கூலி என மீண்டும் டாப் கியரில் சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், அக்‌ஷரா ஹாசன் குறித்த எந்தவொரு செய்தியும் வராமல் இருந்தது. இந்நிலையில், அக்‌ஷ்ரா ஹாசன் பெயரை பயன்படுத்தி முறைகேடு நடப்பதாகவும் தனது ரசிகர்கள் மற்றும் சினிமா நண்பர்கள் அலர்ட்டாக இருக்க வேண்டி ஒரு போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் இளைய மகள்: நடிகர் கமல்ஹாசனுக்கும் நடிகை சரிகாவுக்கும் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் என இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். ஸ்ருதிஹாசன் முதலில் லக் எனும் படத்தில் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர், தமிழில் சூர்யாவுடன் இணைந்து 7ஆம் அறிவு படத்தில் நடித்தார். இன்றும் முன்னணி நடிகையாக இந்திய சினிமாவில் வலம் வருகிறார். நடிகை அக்‌ஷரா ஹாசன் தனுஷ் நடிப்பில் வெளியான இந்தி படமான ஷமிதாப் படத்தின் மூலம் 2015ம் ஆண்டு அறிமுகமானார். அஜித் குமாரின் விவேகம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தில் நடித்த அக்‌ஷரா ஹாசன் கடைசியாக அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் நடித்திருந்தார். 2022ம் ஆண்டுக்குப் பிறகு அக்‌ஷரா ஹாசனுக்கு எந்தவொரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

தயாரிப்பு பணியில் ஈடுபடவில்லை: அப்பா கமல்ஹாசன் ராஜ்கமல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தக் லைஃப் படமே அந்த நிறுவனத்தின் மூலம் தான் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில், சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் அக்‌ஷரா ஹாசன், புதிதாக ஊட்டியில் அலுவலகம் அமைத்து தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதாக இப்ராஹிம் அக்தர் என்பவர் தனது பெயரையும் தனது குடும்பத்தின் பெயரையும் பயன்படுத்தி பொய்யான செய்தியை பரப்பி வருகிறார். இதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை. என்னுடைய நண்பர்கள் மற்றும் சினிமா உலகினர் யாரும் இந்த பொறியில் சிக்கிவிட வேண்டாம் என எச்சரிக்கை போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

என்ன பிரச்னை?: நடிகை அக்‌ஷரா ஹாசன் பெயரில் போலியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டு இருப்பதாக அவரே பதிவிட்டு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அக்‌ஷரா ஹாசன் ஏதோ பெரிய பிரச்னையில் சிக்கியுள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அப்பா கமல்ஹாசனிடம் சொன்னால், அவரே இந்த சிக்கலை தீர்த்து வைப்பாரே என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 33 வயதாகும் அக்‌ஷரா ஹாசன் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. காதல், பிரேக்கப் என அவர் குறித்து எந்தவொரு கிசுகிசுக்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X