பிரபல ஹீரோயின் அக்‌ஷரா ஹாசனின் மேக்கப் மேன் கொரோனா தொற்றுக்குப் பலி.. நடிகை உருக்கமான போஸ்ட்!

By

மும்பை: கொரோனா காரணமாக நடிகை அக்‌ஷரா ஹாசனின் மேக்கப் கலைஞர் உயிரிழந்திருப்பது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் உலகத்தை மிரட்டி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.71 கோடியாக உயர்ந்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை 1.06 கோடியாகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.69 லட்சமாகவும் உள்ளது.

இரண்டாவது இடம்

இரண்டாவது இடம்

இந்தியாவிலும் இந்தக் கொடூர வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்த உயிர்கொல்லி வைரஸ், ஏராளமானோரின் உயிரை பலிவாங்கியுள்ளது. உலகம் முழுவதுமே இந்த வைரஸுக்கு எதிராக போராடி வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

நடிகை ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய்

இந்த தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நடிகை ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆரத்யாவுக்கும் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தனிமைப்படுத்தப்பட்டனர்.

எஸ்.எஸ்.ராஜமவுலி

எஸ்.எஸ்.ராஜமவுலி

பிறகு தொற்று தீவிரமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன், குணமானதை அடுத்து வீட்டுக்குத் திரும்பினர். நடிகர் விஷாலும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டார். இப்போது பிரபல பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அக்‌ஷரா ஹாசன்

அக்‌ஷரா ஹாசன்

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா ஹாசனின் மேக்கப் மேன் சச்சின் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். அக்‌ஷராஹாசன் ஷமிதாப் என்ற படம் மூலம் ஹீரோயின் ஆனார். இதில் அமிதாப்பச்சன், தனுஷ் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இருந்து அக்‌ஷராவின் மேக்கப் மேனாக பணியாற்றியவர் சச்சின். கொரோனாவுக்கு அவர் உயிரிழந்ததை தனது சமுக வலைதள பக்கத்தில் அக்‌ஷரா குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் தாதா

சச்சின் தாதா

அதில், இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாம் பலரை இழந்துவிட்டோம். இது எனக்கு பாரத்தை உண்டாக்கியது. இந்நிலையில் இப்போது சச்சின் தாதாவையும் இழந்துவிட்டோம். இதை கடினமான இதயத்துடனே எழுதுகிறேன். ஷமிதாப் படத்தில் இருந்து சச்சின் தாதா எனக்கு மேக்கப் மேனாக இருந்தார். மகிழ்ச்சியான மனிதர். திறமையான கலைஞர்.

சிறந்த தந்தை

சிறந்த தந்தை

அவருடன் செல்லமான சேட்டைகளைச் செய்திருக்கிறேன். அவர் எனக்கு சிறந்த நண்பராக இருந்தார். அவரது இரண்டு மகன்களுக்கு சிறந்த தந்தையாகவும் அவர் மனைவிக்கு அற்புதமான கணவராகவும் இருந்தார். அவரை இழந்ததாக சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது எங்கிருந்தாலும் அவர் அமைதியை காணட்டும். அவர் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கட்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X