»   »  அக்ஷயாவின் புலம்பல்!

அக்ஷயாவின் புலம்பல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கலாபக் காதலனில் அக்கா புருஷனுக்கு ரூட் விடுபவராக அசத்திய அக்ஷயாஇயக்குநர்கள் மீது படு காரமாக இருக்கிறார்.

கோவில்பட்டி வீரலட்சுமியில் சிம்ரனின் தங்கையாக நடித்தவர்தான் அக்ஷயா.ஆனால் அந்தப் படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. தமிழ் சினிமாவில் நல்லபிரேக்குக்காக காத்திருந்தவருக்கு வந்து சேர்ந்தது கலாபக் காதலன்.

இதில் கிட்டத்தட்ட வில்லி ரோலில் நடித்தார் அக்ஷயா. ரேணுகா மேனனின்தங்கச்சியாக, அக்கா புருஷனை கவிழ்க்க நினைக்கும் காம மச்சினியாக வந்துஅசத்தினார் அக்ஷயா.

பெரிய ரவுண்டு அடிப்பார் என்று பார்த்தால் அக்ஷயாவை அதற்குப் பிறகு ஆளையேகாணவில்லை. நடிப்போடு, கவர்ச்சியையும் சேர்ந்து கொடுத்து கலக்கிய அக்ஷயாஇப்போது யாரைப் பார்த்தாலும் தமிழ் சினிமா இயக்குநர்கள் மீது எரிந்துவிழுகிறாராம்.

காரணம் அவரை அணுகிகற அத்தனை இயக்குநர்களுமே வில்லியாகவோ அல்லதுகாம வெறி பிடித்த பிசாசு கேரக்டருக்கோதான் அக்ஷயாவை அழைக்கிறார்களாம்.இதனால் கடுப்பாக இருக்கிறார் அக்ஷயா.

எனது நடிப்புத் திறமையை வெளிக் காட்டத்தான் கலாபக் காதலனில் அப்படிநடித்தேன். அதைப் புரிந்து கொண்டு எனக்கு நல்ல நல்ல கேரக்டர்களாககொடுப்பார்கள் என்று பார்த்தால் கலாபக் காதலன் டைப் ரோலே கொடுக்கிறார்களேஎன்று புலம்புகிறார் அக்ஷயா.

கலாபக் காதலன் ரோல் அத்தோடு முடிந்து போயிற்று. தொடர்ந்து அதே போல நடிக்கமுடியுமா என்றும் விரக்தி காட்டுகிறார் அக்ஷயா. இப்போது அக்ஷயாவின் ஒரேஆறுதல் கஜா தான். இப்படத்தில் அக்ஷயதான் ஹீரோயினாம். கிளாமரும் நிறையவேஇருக்கிறதாம்.

இப்படத்தில் தொட்டு விட தொட்ட விட மலரும், கை பட்டு விட பட்டு விடமயங்கும் என்ற எம்.ஜி.ஆர். பாடலை ரீமிக்ஸ் செய்து, அதில் அக்ஷயாவை படுகிளாமராக ஆட வைக்க திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் பாடலுக்கான ராயல் டிதொகை அதிகமாக இருந்ததால் பயந்து போன தயாரிப்பாளர் அந்த ஐடியாவை டிராப்செய்து விட்டாராம்.

அக்ஷயாவை அசத்துகிற மாதிரி கேரக்டர் கொடுங்களேப்பா!!

Read more about: akshaya is tensed

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil