அக்ஷயாவின் கஜ கஜா...

By Staff

கலாபக் காதலன் அக்ஷயா, கஜா படத்தில் கிண்டி கிழங்கெடுத்து வறுத்துபொறித்தெடுத்துள்ளாராம் கிளாமரில்.

கோவில்பட்டி வீரலட்சுமிதான் அக்ஷயாவின் முதல் படம். இது நெறைய பேருக்குத்தெரியாது. ஆப்படத்தில் சிம்ரனின் தங்கச்சியாக வந்து போனார் அக்ஷயா.அப்படத்தைப் பார்த்துத்தான் அக்ஷயாவுக்கு கலாபக் காதலன் பட வாய்ப்புகிடைத்தது.

அக்ஷயாவின் காந்தக் கண்கள்தான் அவருக்கு கலாபக் காதலன் படத்தில் நடிக்கும்கேரக்டர் கிடைக்க முக்கியக் காரணமாம்.

இதை அக்ஷயாவே கூறியுள்ளார். எனது கண்களைப் பார்த்து யாரும் தைரியமாக பேசிவிட முடியாது. தட்டுத் தடுமாற வைத்து விடும் (அப்புறம் திக்கு திசை மாறிப் போகவேண்டியதுதான்...). அப்படி ஒரு பவர் அதுக்கு என்று மார் தட்டிக் கொள்கிறார்.

கண்களாலேயே அக்கா புருஷனை கவர்ந்திழுக்கும் கேரக்டரில் வந்த அக்ஷயா,இப்போது கஜாவில் கிளாமர் கிங்காங்காக மாறி வாலிப உள்ளங்களை வதைக்கக்காத்திருக்கிறார்.

கே.என்.ஆர். (இதுதான் ஹீரோவாட பேரு..) உடன் ஜோடி போட்டு இப்படத்தில்நடித்துள்ளார் அக்ஷயா. படம் முழுக்க அக்ஷயாவின் அட்டகாசம்தான்.

எப்படியெல்லாம் அக்ஷயாவை கிளாமராக காட்டலாம் என உட்கார்ந்து யோசித்துயோசித்து காட்சிகளை இழைத்துள்ளார்களாம். அக்ஷயாவும் செமையான ஒத்துழைப்புதந்து வருகிறார்.

படத்திற்கு புக் செய்யும்போதே தெள்ளத் தெளிவாக சொல்லித்தான் சேர்த்தார்களாம்,கிளாமர்தாம்மா இந்தப் படத்தோட முதலீடு என்று. அக்ஷயாவும் கம் சுளிக்காமல்,அகம் கலங்காமல் அள்ளித் தந்துள்ளார் அமுதசுரபியென.

சரி, இவ்ளோ பலம் இருக்கே, கை நிறையப் படங்கள் இருக்கணுமே என்றுஅக்ஷயாவிடம் கேட்டால்,

அப்படியெல்லாம் இல்லீங்க. நிறைய ரோல்கள் வந்தன. ஆனால் எல்லாமேவில்லியாக, ஓவர் கிளாமர் காட்டுவது போன்ற படங்கள்தான்.

அப்படியே நடித்தால் முத்திரை குத்தி விடுவார்கள் (கண்டிப்பா!) என்று பயந்துதான்,கொஞ்சமாவது நடிக்கவும் வாய்ப்புள்ள கிளாமர் பாத்திரங்களாக (சமத்துக் குட்டி!)தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் என்று படமே இல்லை என்பதை படு நாசூக்காகசமாளிக்கிறார்.

அக்ஷயா .. அம்சம்ய்யா!

Read more about: akshaya in gaja
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X