கங்குவா ஹீரோயினை கையிலேயே டாட்டூவா வரைஞ்சு வச்சிருக்காரே.. திஷா பதானியின் புது பாய் ஃபிரெண்ட் இவரா?
மும்பை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் பாலிவுட் நடிகை திஷா பதானி.
ஆரண்ய காண்டம், பிகில் மற்றும் ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்பின் மகன் டைகர் செராஃபை திஷா பதானி கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்பட்டது.

ஆனால், தற்போது இன்னொரு வெளிநாட்டு மாடல் நடிகருடன் டேட்டிங் செய்து வருகிறார் திஷா பதானி என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், திஷா பதானியின் முழு உருவத்தையே தனது கையில் டாட்டூவாக அவரது புதிய பாய் ஃபிரெண்ட் குத்தி இருக்கிறாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
பான் இந்தியா நடிகை: 31 வயதாகும் திஷா பதானி கடந்த 2015 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லோஃபர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 2016 ஆம் ஆண்டு எம்எஸ் தோனி பயோபிக் திரைப்படத்தில் தோனியின் முன்னாள் காதலியாக இவர் நடித்திருப்பார். மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் இவர் இணைந்து நடித்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
டைகர் ஷெராஃப் காதலி: 2018 ஆம் ஆண்டு வெளியான பாகி படத்தில் டைகர் ஷெராஃப் உடன் இணைந்து திஷா பதானி நடித்த நிலையில், இருவரும் பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் செல்ல தொடங்கினர். டைகர் ஷெராஃப் குடும்பத்தில் ஒருத்தராகவே திஷா பதானி மாறியிருந்தார். பாகி 2 படத்தை தொடர்ந்து பாகி 3 படத்திலும் இவர் நடித்தார். இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக எல்லாம் தகவல்கள் வெளியாகின.
திஷா பதானி டாட்டூ: கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள திஷா பதானியின் காதலர் என கிசுகிசுக்கப்படும் அலெக்ஸண்டர் அலெக்ஸ் இலிக் தனது கையில் திஷா பதானியின் உருவத்தை டாட்டூவாக குத்தியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் திஷா பதானி மற்றும் அலெக்ஸ் இருவரும் காதல் பறவைகள் தான் என கன்ஃபார்ம் செய்து விட்டனர்.
திஷா பதானி ரியாக்ஷன்: கங்குவா மற்றும் கல்கி படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள திஷா பதானி அந்த டாட்டூவை பார்த்து விட்டு "நீ என்னோட நெருங்கிய நண்பண் அலெக்ஸ்.. இப்படியொரு பாய் ஃபிரெண்ட் எனக்கு கிடைச்சதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்" என போஸ்ட் போட்டுள்ளார். திஷா பதானியின் பெஸ்டியா மைக்கேல் என்றும் பெஸ்டி யாராவது டாட்டூவெல்லாம் இப்படி போடுவாங்களா? என ரசிகர்கள் சந்தேகத்துடன் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











