நீங்க திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோனு சொன்ன ஆலியா பட்.. கண் கலங்கிய சமந்தா என்னதான் நடந்துச்சு

ஹைதராபாத்: பாலிவுட் கதாநாயகி ஆலியா பட் நடித்துள்ள படம் ஜிக்ரா. இந்தப் படம் வரும் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டுள்ளதால், படத்தினை தென்னிந்தியாவிலும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவின் மார்க்கெட் பெரியது என்பதால், அங்கு ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஜிக்ரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது சமந்தா ஆலியா பட் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

alia bhatt samantha ruth prabhu jigra

வாசன் பாலா இயக்கத்தில் ஆலியா பட் மற்றும் வேதாங் ரெய்னா நடித்துள்ள ஜிக்ரா திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை அதாவது அக்டோபர் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படியான நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை சமந்தாவும் நடிகர் ராணா டகுபதியும் கலந்து கொண்டு அசத்தினர். சமந்தா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக, ஆலியா பட் பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

alia bhatt samantha ruth prabhu jigra

சமந்தா பேசுகையில், " ஆலியா, உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது உனக்கே நன்றாகத் தெரியும். நீங்கள் நடிக்கும் ஒவ்வொரு படமும் மிகவும் முக்கியமானதாக மாறி வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் உங்களுடைய படங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கமும் மிக முக்கியமானது உள்ளது. தனது படங்களுக்காக ஆலியா எடுத்துக் கொள்ளும் ரிஸ்க்கான விஷயங்கள் இன்றைக்கும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. ஜிக்ரா படம் பிரமாண்டமான வெற்றியை உங்களுக்கு கொடுக்கும். அதற்கு எனது வாழ்த்துகள்" எனப் பேசினார்.

alia bhatt samantha ruth prabhu jigra

ஹீரோ: அதேபோல் ஆலியா பட் பேசுகையில், " எனது அன்பிற்குரிய சமந்தா. திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் நீங்கள்தான் ஹீரோ. உங்களது திறமை, உங்களது வலிமை, உங்களது உடலை நீங்கள் வருத்திக் கொள்வதைப் பார்க்கும்போது எனக்கு உத்வேகமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. இவற்றை நான் பாராட்டுகின்றேன். ஒரு பெண்ணாக இருப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். அதிலும் இந்த ஆண்களின் ஆதிக்கம் இருக்கக்கூடிய சமூகத்தில் பெண்ணாக வாழ்வது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது.

alia bhatt samantha ruth prabhu jigra

சமந்தாவுடன் நடிக்க: சமந்தா நீங்கள் உங்களது சொந்தக் காலில் நிற்கின்றீர்கள். அதனால்தான் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகின்றீர்கள். இதுமட்டும் இல்லாமல் நீங்கள் உங்கள் கால்கள் மூலம் கொடுக்கும் ஒவ்வொரு உதையும் மிகவுமே முக்கியமானது. அது பலருக்கு முன்மாதிரியாக எப்போது இருக்கவேண்டும் என ஆசைப்படுகின்றேன். சமந்தாவுடன் தான் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகின்றேன். இயக்குநர் த்ரிவிக்ரம் சார் நீங்கள் எங்களுக்கான கதையை உருவாக்குங்கள். நான் இதனை மேடைக்காக சொல்லவில்லை.

alia bhatt samantha ruth prabhu jigra

உத்திரவாதம்: பொதுவாக நடிகைகள் கொஞ்சம் பொறாமையாக இருப்பதாக கூறுவார்கள். ஆனால் சமந்தா அவ்வாறு இல்லாமல், எனது படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ஒரு பான் இந்தியா சூப்பர் ஸ்டார் எனது படத்திற்கு ஆதரவாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு நான் என்றைக்கும் நன்றி உள்ளவளாக இருப்பேன். இந்த நிகழ்ச்சிக்காக சமந்தாவை தொடர்புகொண்டு நான் பேசியபோது, வெறும் 6.5 நொடிகளில் வருவதாக் உத்திரவாதம் அளித்தார்" இவ்வாறு ஆலியா பட் பேசும்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஆலியா பட்டின் பேச்சினைக் கேட்ட சமந்தாவின் முகம் கொஞ்சம் கண் கலங்கியபடி தெரிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X