ரூ. 7.86 கோடி அபார்ட்மென்ட்டை ரூ. 13.11 கோடிக்கு வாங்கிய வாரிசு நடிகை

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை ஆலியா பட் மும்பை ஜுஹு பகுதியில் ரூ. 13 கோடிக்கு அபார்ட்மென்ட் வாங்கியுள்ளார்.

பாலிவுட் நடிகை ஆலியா பட் வீடுகளில் முதலீடு செய்து வருகிறார். ஏற்கனவே அவருக்கு சொந்தமாக மும்பையில் இரண்டு அபார்ட்மென்டுகள் உள்ளன.

இந்நிலையில் அவர் மும்பை ஜுஹு பகுதியில் சொகுசு அபார்ட்மென்ட் ஒன்றை அதுவும் அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.

ஆலியா

ஆலியா

ஜுஹு பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அபார்ட்மென்டுகளுக்கு கிராக்கி அதிகம். அந்த கட்டிடத்தில் ரூ. 7.86 கோடிக்கு அபார்ட்மென்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் ஆலியோவோ முதல் தளத்தில் உள்ள அபார்ட்மென்ட்டை இரட்டிப்பு தொகை கொடுத்து வாங்கியுள்ளாராம்.

வரி

வரி

ரூ. 13.11 கோடி கொடுத்து அபார்ட்மென்ட் வாங்கியுள்ள ஆலியா அதற்கு ரூ. 65.5 லட்சம் ஸ்டாம்ப் டியூட்டி கட்டியுள்ளார். ஆலியா இப்படி இரண்டு மடங்கு தொகை கொடுத்து வாங்கியுள்ள 2,300 சதுர அடி சொகுசு அபார்ட்மென்ட்டில் அவருக்கு இரண்டு கார் பார்க்கிங் இடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

முதலீடு

முதலீடு

பிரபலங்கள் வசிக்கும் ஜுஹு பகுதியில் உள்ள அபார்ட்மென்ட் என்பதால் ஆலியா கொடுத்த தொகை ஒன்றும் பெரிது இல்லை. இத்தகைய அபார்ட்மென்ட்களில் முதலீடு செய்யவே பிரபலங்கள் விரும்புகிறார்கள் என்று ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

ஆலியா ரன்வீர் சிங்குடன் சேர்ந்து நடித்துள்ள கல்லி பாய் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மேலும் அவர் தனது காதலரான ரன்பிர் கபூருடன் சேர்ந்து பிரம்மாஸ்திரா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X