கவர்ச்சி பொங்க கடலில் குளிப்பது யாருன்னு பாருங்க.. அடடே இவரா இப்படி மாறிட்டாரு.. ரசிகர்கள் ஷாக்!

மும்பை: 31 வயதாகும் நடிகை ஆலியா பட் கடைசியாக நடித்த ஜிக்ரா படம் தோல்வியை தழுவிய நிலையில், அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு இடையே தன்னுடைய குடும்பத்துடன் விடுமுறையை வெளிநாட்டில் ஜாலியாக கொண்டாட சென்றுள்ள ஆலியா பட் அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து ஆலியா பட் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. ஏற்கனவே கணவர் தனக்கு முத்தம் கொடுக்க மகள் முறைத்துக் கொண்டு பார்க்கும் போட்டோவை வெளியிட்டு இணைய வாசிகளை சிரிப்பலையில் ஆழ்த்தியிருந்தார்.

alia bhatt heroine swim wear

இந்நிலையில், திடீரென மோனோகினி உடையை அணிந்துக் கொண்டு கடலில் குளிக்கும் போட்டோ ஒன்றையும் அதில் ஷேர் செய்து ஒட்டுமொத்த ஃபாலோயர்களின் கவனத்தையும் தனது இன்ஸ்டா பக்கம் திருப்பியுள்ளார் ஆலியா பட்.

alia bhatt heroine swim wear

கொஞ்சம் கிளாமர் நிறைய நடிப்பு: பாலிவுட்டில் நெப்போடிசம் சர்ச்சையில் அதிகம் பாதிக்கப்பட்டாலும் அதை எல்லாம் தாண்டி நடிகை ஆலியா பட் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். 86.2 மில்லியன் ரசிகர்கள் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர். சினிமாவில் பாலிவுட் நடிகைகள் அதிகம் கவர்ச்சியையும் கொஞ்சம் நடிப்பையும் காட்டி வரும் நிலையில், கொஞ்சம் கிளாமரையும் அதிக நடிப்பையும் கொட்டி டாப் ஹீரோயினாக மாறியுள்ளார். கங்குபாய் கத்தியாவடி, ஆர்ஆர்ஆர் படங்கள் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

கடலில் கவர்ச்சி கன்னி: தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு ஜாலி டூர் சென்றுள்ள நடிகை ஆலியா பட் அங்கே கடலில் குளிக்கும் போது மோனோகினி உடையுடன் எடுத்த புகைப்படத்தையும் ஸ்பீட் போட்டில் பயணிக்கும் காட்சிகளையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆலியா பட் அதிகமாக பிகினி போட்டோக்களை போடாமல் இருந்து வரும் நிலையில், மீண்டும் கிளாமர் பக்கம் திரும்புகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

alia bhatt heroine swim wear

கைவசம் 2 படங்கள்: சங்கார்ஷ் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஆலியா பட் கடந்த 2012ம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் ஆப் தி இயர் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஜிக்ரா ஃபிளாப் ஆன நிலையில், இந்த ஆண்டு அவர் நடிப்பில் ஆல்ஃபா திரைப்படம் உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு லவ் அண்ட் வார் படம் ரிலீஸாக காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X