ஆலியா பட்டுக்கு இத்தனை அறிவா?: வாட்ஸ்ஆப்பில் கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: பாலிவுட் நடிகை ஆலியா பட் பற்றிய ஜோக்குகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
பாலிவுட் நடிகை ஆலியா பட் பற்றிய ஜோக்குகள் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. இந்த ஜோக்குகள் வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த ஜோக்குகளை நீங்களும் படித்து வாய்விட்டு சிரியுங்கள்.

ஓட்டப் பந்தயம்
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆலியா பட் கலந்து கொள்கிறார். ரெஃப்ரீ 1,2, 3 என்று கூறியவுடன் அனைவரும் ஓடிவிட்டனர். ஆனால் ஆலியா மட்டும் ஓடவில்லை. ஏன் என்று கேட்டதற்கு என்னுடைய எண் 4 என்று கூறினாராம்.

கடன்
வங்கியில் இருந்து ஆலியா பட்டுக்கு போன் செய்து உங்களுக்கு இன்டரஸ்ட்(வட்டி) இல்லாத கடன் தருகிறோம் என்கிறார்களாம். அதற்கு ஆலியா உங்களுக்கே இன்டரஸ்ட் இல்லாமல் கடன் தர வேண்டாம் என்று கூறுகிறாராம்.

கண்ணாடி
ஒரு காலத்தில் பொய் சொல்பவர்களை கொல்லும் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்ததாம். அந்த கண்ணாடி முன்பு நின்று பிரான்ஸ்காரர் நான் தம்மடிப்பது இல்லை என்று நினைக்கிறேன் என்று கூறியதும் இறந்துவிட்டார். என் மனைவியை காதலிக்கிறேன் என நினைக்கிறேன் என்று கூறிய அமெரிக்கர் இறந்துவிட்டார். ஆலியாவோ நான் நினைக்கிறேன் என்று கூறியதுமே இறந்துவிட்டாராம்.

ரூ.1000
ஆலியாவும் நடிகர் வருண் தவானும் சாலையில் நடந்து செல்கிறார்களாம். அப்போது சாலையில் 1000 ரூபாய் நோட்டு கிடப்பதை பார்த்த ஆலியா வருணிடம் நாம் இப்போது என்ன செய்ய என்கிறாராம். அதற்கு வருண் ஃபிஃப்டி, ஃபிஃப்டி எடுத்துக் கொள்ளலாம் என்று கூற ஆலியோவோ ஆளுக்கு ரூ.50 எடுத்துக் கொண்டால் மீதமுள்ள ரூ.900ஐ என்ன செய்ய என கேட்கிறாராம்.

படம்
ஆலியா: நாம் படம் பார்க்க செல்வோம்
வருண்: எனக்கு டாக்டரை பார்க்க வேண்டும். அபாயின்ட்மென்ட் உள்ளதே.
ஆலியா: உனக்கு உடல்நலம் சரி இல்லை என்று கூறி அபாயின்ட்மென்ட்டை கேன்சல் செய்.

தங்கப் பதக்கம்
ஆலியா செய்தித்தாளை வாசிக்கையில், செய்தி: நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் தங்கப் பதக்கத்தை இழந்தார். ஆலியா: முட்டாள், நீளம் தாண்டபோது தங்கப்பதக்கத்தை போட்டுக் கொண்டு செல்ல யார் சொல்லிக் கொடுத்தார்கள்.

தேசியக் கொடி
சுதந்திரதினத்தை முன்னிட்டு தேசியக் கொடி வாங்க ஆலியா கடைக்கு செல்கிறார். அவர் கேட்ட கேள்வியில் கடைக்காரர் மயங்கிவிட்டார். என்ன கேட்டார் தெரியுமா, வேறு நிற கொடி இருந்தால் காட்டுங்கள்.


Click it and Unblock the Notifications











