இந்த சின்ட்ரெல்லா விரும்பியதெல்லாம்.. அந்த பயம் இருக்கட்டும்.. வைரலாகும் வாரிசு ஹீரோயின் போட்டோஸ்!

By

சென்னை: நடிகை ஆலியா பட் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகை ஆலியா பட்டுக்கு அறிமுகம் தேவையில்லை. பாலிவுட்டின் சினிமா குடும்பத்து செல்லங்களில் ஒருவர்.

பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் மகேஷ் பட், நடிகை சோனி ரஸ்தான் தம்பதியின் மகள்.

சேதன் பகத் நாவல்

சேதன் பகத் நாவல்

கரண் ஹோகரின் ஸ்டுடன்ட் ஆப் த இயர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆலியா. சித்தார்த் மல்ஹோத்ரா, வருண் தாவன் ஹீரோக்களாக நடித்தனர். இதையடுத்து இம்தியாஸ் அலியின் ஹைவேஸ், சேதன் பகத்தின் நாவலை அடிப்படையாக கொண்டுஉருவான 2 ஸ்டேட்ஸ் படங்களில் நடித்தார்.

தமிழ்ப் பெண்ணாக

தமிழ்ப் பெண்ணாக

2 ஸ்டேட்ஸ் படத்தில், அனன்யா சுவாமிநாதன் என்ற தமிழ்ப் பெண்ணாக நடித்திருந்தார் ஆலியா பட். இதில் அவர் நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து கபூர் அண்ட் சன்ஸ், உட்தா பஞ்சாப், கல்லிபாய் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது 3 படங்களில் நடித்து வருகிறார்.

ராம்சரண் ஜோடியாக

ராம்சரண் ஜோடியாக

ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ஆலியா பட். இதன் படப்பிடிப்பில் அடுத்த மாதம் கலந்துகொள்ள இருக்கிறார். இதில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இதில் ராம்சரண் ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரசிகர்கள் விளாசல்

ரசிகர்கள் விளாசல்

நடிகர் சுஷாந்த் சிங் மறைவை அடுத்து எழுந்த நெபோடிசம் குறித்த சர்ச்சையில் ஆலியா பட்டும் பாதிக்கப்பட்டார். வாரிசு நடிகர், நடிகைகளால் திறமையானவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என அவரையும் ரசிகர்கள் சரமாரியாக விளாசியிருந்தனர், சோசியல் மீடியாவில். இது பரபரப்பானது அப்போது.

காதல், திருமணம்

காதல், திருமணம்

இவர், இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வருகிறார் என்றும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தி பரவியது. ரன்பீர் கபூர் தந்தை ரிஷி கபூர் கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்ததால், அது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புது போட்டோஷூட்

புது போட்டோஷூட்

இந்நிலையில் சமூக வலைதளங்களில், நடிகைகள் தங்கள் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர். நடிகை ஆலியா பட்டும் தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். கிளாமராக எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சின்ட்ரெல்லா கேப்ஷன்

சின்ட்ரெல்லா கேப்ஷன்

இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, சின்ட்ரெல்லா ஒரு போதும் இளவரசனை விரும்பியதில்லை. அவள் கேட்டதெல்லாம் புத்தம் புதிய உடைகளையும் இரவு வெளியே செல்வதையும்தான் என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து பொருத்தமான கேப்ஷன் என்றும், நீங்க செம அழகு என்றும் வழக்கம் போல நெட்டிசன்ஸ் கமென்ட் போட்டுள்ளனர்.

அதிக டிஸ்லைக்ஸ்

அதிக டிஸ்லைக்ஸ்

பல நடிகர், நடிகைகளும் இதற்கு லைக் செய்துள்ளனர். லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளியுள்ளது இந்த போட்டோஸ். சிலர், உங்கள் சடக் 2 அதிகமான டிஸ்லைக்ஸ் பெற்று சாதனை படைத்ததற்கு வாழ்த்துகள் என்று நக்கலாகக் கூறியுள்ளனர். சிலர் அந்த பயம் இருட்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆலியாவின் இந்த புகைப்படங்களை வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X